×

வேலூர் மத்திய சிறை கைதிகள் நடத்தும் பெட்ரோல் பங்க்கில் சோலார் பேனல் பயன்பாட்டுக்கு வந்தது

வேலூர்: வேலூர் மத்திய சிறையில் நன்னடத்தை கைதிகள் நடத்தும் பெட்ரோல் பங்க்கில் சோலார் பேனல் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. இதனால் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை மின் கட்டண செலவு குறையும் என்று சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

குற்றங்கள் செய்துவிட்டு சிறைக்கு செல்லும் கைதிகள், சிறையை விட்டு வெளியே வரும் போதும், மீதமுள்ள வாழ்க்கையை அமைதி வாழ்வதற்காகவும் பல்வேறு தொழிற்பயிற்சிகள், வேலைவாய்ப்பு பயிற்சி, உயர்கல்வி உள்ளிட்டவை சிறைத்துறை மூலம் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்துடன் தமிழ்நாடு சிறைத் துறை இணைந்து, பெட்ரோல் பங்க் அமைக்க முடிவுசெய்யப்பட்டது. இதற்காக, தமிழகத்தில் சென்னை, கோவை, வேலூர், பாளையங்கோட்டை, புதுக்கோட்டை ஆகிய 5 இடங்கள் தேர்வு செய்யப்பட்டு, பெட்ரோல் பங்க் திறக்கப்பட்டு, சுழற்சி முறையில் கைதிகள் பணியாற்றி வருகின்றனர்.

இதற்கிடையில், பெட்ரோல் பங்க்கில் மின்சார தேவை குறைக்கும் விதமாக, சோலார் பேனல் அமைக்கப்படும் என்று, திறப்பு விழாவின்போது, தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, தற்போது, வேலூர் மத்திய சிறை அருகே கைதிகள் நடத்தும் பெட்ரோல் பங்க்கில் சோலார் பேனல் அமைக்கும் பணிகள் முடிந்து, தற்போது பயன்பாட்டிற்கு வந்துள்ளது. இதுகுறித்து சிறைத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘தமிழகத்தில் நன்னடத்தை கைதிகள் நடத்தும் பெட்ரோல் பங்க்குகளுக்கு தற்போது, சோலார் பேனல் அமைக்கப்பட்டு வருகிறது. இதில் முதற்கட்டமாக வேலூர் மத்திய சிறையில் சோலார் பேனல் அமைக்கும் பணிகள் முடிக்கப்பட்டு, தற்போது, பயன்பாட்டிற்கு வந்துள்ளது.

மின் வாரியத்தில் இருந்து, சோலார் பேனல் மற்றும் மின்வாரியத்தின் மூலம் மீட்டர் அமைப்பதற்கு கடிதம் வழங்கப்பட்டுள்ளது. மின்வாரியத்தில் இருந்து மின் மீட்டர் பொருத்தியதும், மின்சாரம் மற்றும் சோலார் பேனலில் இருந்து எடுக்கப்படும் மின் அளவு தனித்தனியாக கணக்கீடு செய்யப்படும். இதன் மூலம் சிறை நிர்வாகத்திற்கு ஆண்டுக்கு ரூ.2.5 முதல் ரூ.5 லட்சம் வரை மின் கட்டணம் செலுத்துவது குறையும்’ என்றனர்.

Tags : solar panel ,petrol station ,inmates ,Vellore Central Jail , Solar panel
× RELATED திருச்சி மத்திய சிறை நுழைவாயிலில் ரூ1.09...