சென்னை : ரேஷன் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண நிதி வழங்கும் திட்டம் மே 10ம் தேதி தொடங்கப்பட உள்ளது. கொரோனா அச்சுறுத்தல் தற்போது உயர்ந்து வரும் நிலையில், மக்களின் இன்னல்கள் தொடர்வதால் தமிழக மக்களின் துன்பங்களைப் போக்குவதற்கும், வாழ்வாதாரத்திற்கு உதவும் வகையிலும், அரிசி குடும்ப அட்டை வைத்துள்ள குடும்பங்கள் அனைத்திற்கும் ஆறுதல் அளிக்கும் வகையில் 4,000 ரூபாய் வழங்கப்படும் என்று மு.க.ஸ்டாலின் வாக்குறுதி அளித்து இருந்தார். இதையடுத்து வாக்குறுதியை நிறைவேற்றும் பொருட்டு, சுமார் 2,07,67,000 குடும்ப அட்டைதாரர்களுக்கு 4,153.39 கோடி ரூபாய் செலவில் 2,000 ரூபாய் வீதம் நிவாரண தொகை முதல் தவணையாக மே மாதத்திலேயே வழங்கும் ஆணையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று கையெழுத்திட்டார். .இந்த நிலையில், செய்தியாளர்களை சந்தித்த உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி,ரேஷன் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண நிதி வழங்கும் திட்டத்தை மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளதாக தெரிவித்தார்.10ம் தேதி முதல் டோக்கன் தரப்பட்டு தினமும் 200 பேருக்கு நிவாரண நிதி வழங்கப்படும் என்றும் வீடு வீடாக ரேஷன் அட்டைதாரர்களுக்கு டோக்கன் வழங்கப்படும் என்றும் அமைச்சர் சக்கரபாணி தெரிவித்தார். மேலும் டோக்கன் முறையாக தரப்படுகிறதா என கண்காணிக்க துணை தாசில்தார் தலைமையில் குழு அமைக்கப்படும் என்றும் சக்கரபாணி குறிப்பிட்டுள்ளார். …
The post மே 10ம் தேதி முதல் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.2000 வழங்கும் திட்டம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்!! appeared first on Dinakaran.