அமித்ஷா வருகையால் சென்னையில் போக்குவரத்து பாதிப்பு: ஆம்புலன்ஸ் கூட நகர முடியாத சூழல்

சென்னை: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வருகையால் சென்னையின் பல பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்னை விமானநிலையத்தில் இருந்து கிண்டி வழியாக பட்டினம்பாக்கம் அருகில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலை வந்தடைந்தார். பின் கலைவாணர் அரங்கில் நிழச்சிகளில் பங்கேற்று கொண்டிருக்கிறார் அமைச்சர் அமித்ஷா. அமைச்சரின் வருகை காரணமாக இந்த பகுதிகளில் போக்குவரத்து முழுமையாக ரத்து செய்யப்பட்டிருந்தது. அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மாற்றுபாதையில் செல்ல அறிவுறுத்தப்பட்டிருந்தனர். இதன் காரணமாக சைதாப்பேட்டை, அடையாறு, தேனாம்பேட்டை உள்ளிட்ட சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

 சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக மக்கள் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. இதனால் சென்னை சைதாப்பேட்டையில் ஆம்புலன்ஸ் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.அங்கிருந்த வாகன ஓட்டிகளின் முயற்சியால் ஆம்புலன்ஸ் மெல்ல நகர தொடங்கியது. இதை போன்று சென்னை விமானநிலையம் அருகிலும் ஆம்புலன்ஸ் ஒன்று நகரமுடியாமல் நின்றது. விமானநிலையத்தில் மையப்பகுதியில் நகரமுடியாமல் சிக்கிக்கொண்ட ஆம்புலன்ஸ் நீண்டநேரமாக நகரமுயடியாமல் நின்றது.

மத்திய அமைச்சர் கொரோனா காலத்தில் இதுபோன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது அவசியமா என்றும், காணொளிமூலமாகவே அரசு நிகழ்வுகளில் பங்கிற்க்கேற்க்கலாம் என்றும் வாகனஓட்டிகள் தெரிவிக்கின்றனர். தமிழக அரசு பொதுமக்களுக்கு இடையூறு இல்லா வகையில் இதுபோன்ற நிகழ்வுகளுக்கு  ஏற்ப்பாடு செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டனர்.

Related Stories:

>