×

தமிழ்நாட்டிற்கு மோடி, அமித்ஷா, நிர்மலா சீதாராமன் வருகிறார்கள்; வெறும் கையை வீசி விட்டு வருவதால் எங்கள் மக்களுக்கு என்ன பயன்? தயாநிதி மாறன் கேள்வி

சென்னை: தமிழ்நாட்டிற்கு மோடி, அமித்ஷா, நிர்மலா சீதாராமன் வருகிறார்கள். வெறும் கையை வீசி விட்டு வருவதால் எங்கள் மக்களுக்கு என்ன பயன் என்று மத்திய சென்னை தொகுதி திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் கேள்வி எழுப்பியுள்ளார். மத்திய சென்னை தொகுதி திமுக வேட்பாளர் தயாநிதிமாறன், சென்னை அண்ணாநகர் டவர் பூங்கா பகுதியில் இன்று காலை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அவருக்கு பூங்காவிற்கு வந்தவர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது, தனது மோட்டார் பைக்கை இயக்குமாறு தயாநிதிமாறனிடம் ஒரு இளைஞர் கோரிக்கை வைத்தார். அதை ஏற்று தயாநிதிமாறன் ஓட்டினார். இது அங்கிருந்தவர்களை வெகுவாக கவர்ந்தது. வாக்கு சேகரிப்பின் போது தயாநிதிமாறன் அளித்த பேட்டி: மத்திய சென்னை தொகுதி மக்களை சந்திக்கும் போது அவர்கள் உதயசூரியனுக்கு வாக்களிப்ேபாம் என்ற உறுதியை தருகிறார்கள். அதை பார்க்கும்போது மத்திய சென்னையை போல தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெல்லும் என்பதில் சந்தேகம் இல்லை.

அமித்ஷா என்ன சொல்லியிருக்க வேண்டும் என்றால், 10 ஆண்டுகளாக நாங்கள் தமிழகத்திற்கு ஒன்றுமே செய்யவில்லை. அதிமுக கூட்டணியில் இருந்தபோது அவர் பேசியிருக்கலாம். மோடி, அமித்ஷா, நிர்மலா சீதாராமன் வருகிறார்கள். தமிழ்நாட்டிற்கு என்ன கொண்டு வந்தீங்க. வெறும் கையை வீசி விட்டு வருவதால் எங்கள் மக்களுக்கு என்ன பயன். 10 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் இந்தந்த திட்டங்களை நாங்கள் நிறைவேற்றி இருக்கிறோம் என்றும் குறிப்பாக எய்ம்ஸ் கல்லூரியை கட்டி முடித்து விட்டோம் என்றும் சொல்ல முடியுமா?. மெட்ரோ ரயில் திட்டத்துக்கு நாங்கள் நிதி ஒதுக்கி விட்டோம். இன்னும் 6 மாதத்தில் முடியும் என்று சொல்ல முடியுமா உங்களால. ஒன்னுமே பண்ணாமல் வெறும் வாயில் வடை சுடுவது தான் பாஜகவினர். அதற்கு அமித்ஷா விதிவிலக்கு கிடையாது. நாங்கள் வரியாக ஒரு ரூபாய் கொடுக்கிறோம்.

நீங்க 29 காசு திருப்பி தாறீங்க. எங்கள் வரி பணத்தை சுரண்டிதான, உத்தரபிரதேசத்தையும், பீகாரையும், குஜராத்தையும் வாழ வைக்கிறீங்க. நல்லா நினைத்து கொள்ளுங்கள். தமிழ்நாட்டு மக்கள், வடஇந்திய தலைவர்கள் மீது மரியாதை வைப்பார்கள். எப்போது என்றால் தமிழ்நாட்டிற்கு நீங்கள் ஏதாவது நல்லது செய்தால் மட்டுமே. நேரு மீது மரியாதை உண்டு. இந்திராகாந்தி மீது மரியாதை உண்டு. ராஜீவ்காந்தி மீது மரியாதை உண்டு. சோனியாகாந்தி மீது மரியாதை உண்டு. மன்மோகன்சிங் மீது மரியாதை உண்டு. ராகுல் காந்தி மீது மரியாதை உண்டு. ஏனென்றால் அவர்கள் தமிழகத்திற்கு நல்ல திட்டங்களை கொண்டு வந்து மக்கள் பயன்படுத்தும் அளவுக்கு சேர்த்தார்கள். ஆனால், ஒன்னும் பண்ணாமல், தமிழ்நாட்டில் இருந்து எவ்வளவு வாரி கொண்டு போகலாம் என்பதை மட்டும் பார்த்தால் மக்கள் ஏமாற மாட்டார்கள். ஆரம்பத்தில் பாஜவுடன் பெரிய கூட்டணி வைத்து இருந்தார்கள். அது யார் என்றால் ஈடி, சிபிஐ, ஐடி… தேர்தல் ஆணையத்தையும்கூட சேர்த்து கொள்வார்கள்.

குஜராத்தில் உள்கட்டமைப்பு சரியில்லை. இந்தியாவில் தலைசிறந்த உட்கட்டமைப்பு தமிழ்நாடுதான். விமான நிலையங்கள், துறைமுகங்கள், படித்த மக்கள் உள்ளனர். அங்கே பார்த்தீர்கள் என்றால் அவ்வளவு ஸ்கீல்டு லேபர் கிடையாது. அதனால்தான் தமிழ்நாட்டில் நோக்கியா, சாம்சங், போர்டு, ஹூண்டாய் போன்ற கம்பெனிகள் வருகிறது. ஏன் வருகிறது என்றால் தமிழ்நாட்டில் உட்கட்டமைப்பு அவ்வளவு சிறப்பாக உள்ளது. குஜராத்திற்கு மிரட்டி, மிரட்டி கூப்பிட்டுக்கொண்டு போகிறார்கள். பண்ணவில்லை என்றால் பிரதமர் கோபித்து கொள்வார் என்கிறார்கள். குஜராத் மாடல் என்றால் தானாகா போக வேண்டும். உ.பி மாடல் என்கிறார்கள், அங்கு முதலீடுகள் தானாக போக வேண்டுமே. இல்லையே. அங்கு மாடல் பெயிலியர். எங்கெல்லாம் பாஜ ஆளுகிறதோ, அங்கெல்லாம் பெயிலியர். நிர்மலா சீதாராமன் பொய் பேசுகிறார். அவரது வார்த்தையில் நேர்மை இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

The post தமிழ்நாட்டிற்கு மோடி, அமித்ஷா, நிர்மலா சீதாராமன் வருகிறார்கள்; வெறும் கையை வீசி விட்டு வருவதால் எங்கள் மக்களுக்கு என்ன பயன்? தயாநிதி மாறன் கேள்வி appeared first on Dinakaran.

Tags : Modi ,Amitsha ,Nirmala Sitharaman ,Tamil Nadu ,Chennai ,Thayaniti Maran ,Central Chennai ,Madhya Chennai ,Dayaniti Maran ,
× RELATED பணம் சுருட்டல், கூலி ஆட்களை வைத்து...