×

காற்று மாசு காரணமாக டெல்லியிலிருந்து வெளியேறினார் சோனியா

புதுடெல்லி: காற்று மாசு காரண மாக மருத்து வர்கள் அறிவுரைப் படி காங் கிரஸ் தலைவர் சோனியா காந்தி டெல்லியிலிருந்து வெளியேறி உள்ளார். காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி கடந்த சில மாதங்களாக உடல்நலக்குறைவு காரணமாக அவதிப்பட்டு வருகின்றார். கடந்த ஜூலை 30ம் தேதி அவர் டெல்லி சர் கங்கா ராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதன் பின்னர் செப்டம்பர் 12ம் தேதி மருத்துவ பரிசோதனைக்காக சில நாட்கள் வெளிநாடு சென்றார். அவருடன் முன்னாள் தலைவர் ராகுலும் சென்றிருந்தார். இதன் காரணமாக. நாடாளுமன்ற கூட்டத்தொடரிலும் இருவரும் பங்கேற்கவில்லை.

டெல்லியில் அதிகரித்து வரும் காற்று மாசுபாடு காரணமாக சோனியா காந்தியின் மார்பு தொற்று குறித்து மருத்துவர்கள் கவலை கொண்டுள்ளனர். டெல்லியில் அதிகரித்து வரும் காற்று மாசு ஆஸ்துமா மற்றும் மார்பு தொற்றை மோசமாக்கி உள்ளது. எனவே டெல்லியில் இருப்பது அவரது உடல்நிலையை மேலும் பாதிக்கும் என்பதால் டெல்லியில் இருந்து வெளியேறும்படி மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர். இதன்படி நேற்று மாலை டெல்லியில் இருந்து சோனியா காந்தி கோவாவின் பானாஜிக்கு புறப்பட்டு சென்றார். அவருடன், அவரது மகன் ராகுல் காந்தியும் உடன் சென்று தங்க உள்ளார். கோவாவில் சில நாட்கள் சோனியா தங்கியிருப்பார் என கூறப்பட்டுள்ளது.



Tags : Sonia ,Delhi , Due to air pollution Sonia left Delhi
× RELATED மாநிலங்களவை எம்.பி.யாக பதவியேற்றார் சோனியா காந்தி..!!