×

மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் 8 மாவட்டங்களில் பரவலாக மழைக்கு வாய்ப்பு; சென்னையில் ஒருசில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்

சென்னை: மாலத்தீவு அருகே வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் 8 மாவட்டங்களில் பரவலாக மழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் மதுரை, தேனி, விருதுநகர், புதுக்கோட்டை, சிவகங்கையில் மழை பெய்க்ககூடும் என கூறப்பட்டுள்ளது. நெல்லை, தென்காசி, குமரி ஆகிய மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. சென்னை உள்பட வடமாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும் புறநகரில் வானம் மேகமூட்டத்துடன் இருந்தாலும் ஒருசில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. அரபிக் கடலின் தென்கிழக்கு பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது என கூறியுள்ளது.

குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு இல்லை என கூறப்படுகிறது. குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளதால் லட்சத்தீவு, கேரள கரையோரம் பலத்த சூறாளவி வீசக்கூடும் என கூறியுள்ளது. 45-55 கி.மீ. வேகத்தில் சூறைக்காற்று வீசும் என்பதால் 2 நாட்கள் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு பரவலாக மழை பொழிவு குறைவாக இருக்கும் என கூறியுள்ளது. நவ. 23-ல் மீண்டும் மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பருவமழை தொடர வாய்ப்பு உள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் அதிகப்பட்டகமாக கடந்த 24 மணிநேரத்தில் ஒட்டப்பிடாரத்தில் (தூத்துக்குடி) 12 செ.மீ. மழை பதிவையுள்ளது. குன்னூரில் 9 செ.மீ. மழையும், கூடலூர் ஸ்ரீவைகுண்டத்தில் 8 செ.மீ மழையும், பாளையம்கோட்டை, பிளவாக்கில் தலா 7 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது.

Tags : showers ,districts ,Tamil Nadu ,Chennai ,places ,Weather Center , In Tamil Nadu, in 8 districts, widespread rain
× RELATED இன்றும் பல மாவட்டங்களில் வெயில்...