×

வணிகவரித்துறையில் புதிய சீனியாரிட்டி பட்டியல் தயாரித்து அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும்: ஐகோர்ட் உத்தரவு

சென்னை: தமிழக வணிக வரித்துறையில் புதிய சீனியாரிட்டி பட்டியல் தயாரித்து பதவி உயர்வு வழங்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்  உத்தரவிட்டுள்ளது
தமிழக வணிக வரித்துறையில் பணியாற்றும் உதவி கமிஷனர், துணை கமிஷனர், கூடுதல் கமிஷனர் பதவி உயர்வு வழங்க சீனியாரிட்டி பட்டியல்  சரியாகப் பின்பற்றப்படவில்லை என்று சென்னை ஐகோர்ட்டில் வணிக வரித்துறை அதிகாரிகள் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்குகள் தலைமை  நீதிபதி ஏ.பி.சாஹி, நீதிபதி செந்தில் குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, வணிக வரித்துறை  அதிகாரிகள் சார்பாக வக்கீல் எம்.ரவி ஆஜராகி, சீனியாரிட்டி அடிப்படையில் திருத்தம் செய்து புதிய சீனியாரிட்டி பட்டியலை தயாரித்து அதன்  அடிப்படையில்தான் பதவி உயர்வு வழங்க வேண்டும் என்று ஏற்கனவே டிவிஷன் பெஞ்ச் உத்தரவிட்டது. தமிழக அரசு இதுவரை அந்த உத்தரவை  பின்பற்றவில்லை. எனவே தற்போதுள்ள சீனியாரிட்டி பட்டியலில் திருத்தம் செய்து புதிய பட்டியலை தயாரித்து அதன் அடிப்படையில் பதவி உயர்வு  வழங்கவேண்டும் என்று வாதிட்டார்.

இதைக்கேட்ட நீதிபதிகள், தற்போது உள்ள சீனியாரிட்டி பட்டியலில் திருத்தம் செய்து புதிய சீனியாரிட்டி பட்டியல்  தயாரித்து அதன் அடிப்படையில் உதவி மற்றும் துணை கமிஷனர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

Tags : Commerce ,iCourt , Preparing New Seniority List in Business Taxation Officers should be given promotion: iCourt order
× RELATED கிறிஸ்டல் ஜெல்லி பந்துகளுக்கு தடை...