×

தீபாவளி வாழ்தது கூறவே முதல்வர், துணை முதல்வரை சந்தித்தேன்; வேல் யாத்திரை பற்றி எதுவும் பேசவில்லை: எல்.முருகன் பேட்டி

சென்னை: தீபாவளி வாழ்தது கூறவே முதல்வர், துணை முதல்வரை சந்தித்ததாக தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். முதர்வருடான சந்திப்பில் வேல் யாத்திரை, அரசியல் பற்றி எதுவும் பேசவில்லை என கூறினார். தமிழகத்தில் வேல் யாத்திரை தொடர்ந்து நடைபெறும் என தெரிவித்தார். பீகாரில் பாஜக வெற்றி பெற்றது போல தமிழகத்திலும் வெற்றி பெரும் எனவும் தெரிவித்தார். வேல் யாத்திரை டிசம்பர் 6-ம் தேதி திருச்செந்தூரில் நிறைவடையும் என கூறினார். பல தேசிய தலைவர்கள், மத்திய அமைச்சர்கள் யாத்திரையில் கலந்து கொள்ள இருக்கின்றனர். எவ்வளவு தடங்கல் வந்தாலும் திட்டப்படி வேல் யாத்திரை தொடரும் என திட்டவட்டமாக கூறினார். தமிழக அரசின் செயல்களை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும், சாலை, கோவில் வீட்டில் இருப்பவர்களை எல்லாம் அரசு முன்னெச்சரிக்கையாக கைது செய்வது கண்டத்தற்குரியது என கூறினார்.

பாஜக தொண்டர்கள் அதிருப்தியில் இருப்பதாக கே.டி.ராகவன் சொன்னது சரிதான் என கூறினார். வேல் யாத்திரைக்கு அரசு தடை விதிப்பதால் பாஜகவினர் அதிருப்தியில் இருப்பதாக கே.டி.ராகவன் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. அதிமுக உடனான கூட்டணி வேறு, கொள்கைகள் வேறு என தெரிவித்தார். சாலையில் செல்பவர்களைக்கூட முன்னெச்சரிக்கையாக கைது செய்வது ஏன்? என்றும், தேர்தல் வரக்கூடிய தமிழகத்தில் கூட்டம் நடத்தாமல் எப்படி இருக்க முடியும் என்றும் எல்.முருகன் கேள்வி எழுப்பினார். எனவே வேல் யாத்திரை என்பது மதம் சார்ந்த நிகழ்ச்சி அல்ல என கூறினார். கொரோனா முன்களப்பணியாளர்களை பாராட்ட, மத்திய அரசின் திட்டங்கள் பற்றி பேசவே வேல் யாத்திரை என செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

Tags : Chief Minister ,Deputy Chief Minister ,Diwali ,Vail Pilgrimage: Interview with L. Murugan , Happy Diwali, Chief Minister, Deputy Chief Minister, L. Murugan
× RELATED பீகார் முன்னாள் துணை முதல்வர் சுஷில் குமார் காலமானார்