×

சற்று குறைந்த தங்கம் விலை: சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 குறைந்து ரூ.54,160க்கு விற்பனை.! வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி

சென்னை : சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 குறைந்து ரூ.54,160க்கு விற்பனையாகி வருகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.25 குறைந்து ரூ.6,770க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்தியாவில் தங்கம் விலை ஒருநாள் உயருவதும், மறுநாள் கொஞ்சம் குறைவதுமாக ஆட்டம் காட்டி வருகிறது. இதனிடையே, இஸ்ரேல் – பாலஸ்தீனம் இடையே நிலவிய போர் காரணமாக உச்சத்தை எட்டியது. அவ்வப்போது சற்று சரிந்து வந்த தங்கம் விலை கடந்த மார்ச் மாதம் தொடக்கத்தில் இருந்து தொடர்ந்து அதிகரித்த வண்ணம் இருக்கிறது.

மே மாத தொடக்கத்தில் இருந்து தங்கம் விலை ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. நேற்று முன்தினம் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.35 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.6,725க்கும், ஒரு சவரன்ரூ.280 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.53,800க்கு விற்பனையானது. நேற்றும் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.70 உயர்ந்து ரூ.6,795-ம், சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ரூ.54,360-க்கும் விற்பனையானது. இந்நிலையில் சென்னையில் ஆபரணத் தங்கத்தில் விலை சவரனுக்கு ரூ. 200 குறைந்து ஒரு சவரன் 54,160-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் ஒரு கிராம் தங்கம் ரூ.6770க்கும் விற்பனையாகிறது. சென்னையில் வெள்ளி விலை கிராமுக்கு மாற்றமின்றி ரூ.92.50க்கு விற்பனை செய்யப்படுகிறது.

The post சற்று குறைந்த தங்கம் விலை: சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 குறைந்து ரூ.54,160க்கு விற்பனை.! வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி appeared first on Dinakaran.

Tags : Chennai ,India ,Dinakaran ,
× RELATED இந்தியா கூட்டணிக் கூட்டம்: முதல்வரின் டெல்லி பயணம் ரத்து