×

ஓபிசி உள்ஒதுக்கீடு அறிக்கை தாமதம் ராமதாஸ் தகவல்

சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று வெளியிட்ட அறிக்கை: பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினரில் மிக மிக பின்தங்கிய நிலையில் உள்ளவர்களை கண்டுபிடித்து அவர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற நோக்கத்துடன் நீதிபதி ரோகிணி ஆணையம் 2017ம் ஆண்டு அக்டோபர் 17ம் தேதி அமைக்கப்பட்டது. 3 ஆண்டுகளுக்கு மேலாகியும் அறிக்கை தாக்கல் செய்ய முடியவில்லை. பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 27% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு 30 ஆண்டுகள் நிறைந்து விட்ட நிலையில், 983 சாதிகளால் அதன் பயனை அனுபவிக்க முடியவில்லை என்பது மிகவும் கொடுமையானது. இது நீடிப்பதை அனுமதிக்கக் கூடாது. அதற்காக நீதிபதி ரோகிணி ஆணையம் கோரிய அனைத்து விளக்கங்களை தமிழ்நாடு உள்ளிட்ட மாநில அரசுகள் உடனடியாக வழங்க வேண்டும்; அதன்மூலம் ஓபிசி வகுப்பினரில் சில பிரிவுக்கு இழைக்கப்படும் அநீதியை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்.

Tags : ஓபிசி உள்ஒதுக்கீடு அறிக்கை தாமதம் ராமதாஸ் தகவல்
× RELATED சமுதாய வளர்ச்சிக்கு சிறப்பாக...