×

8 மாவட்டங்களில் 3 நாட்களுக்கு இடியுடன் கன மழை பெய்யும்

சென்னை: தமிழகத்தில் 8 மாவட்டங்கள் மற்றும் டெல்டா பகுதியில் 3 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மிக கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் 2 நாட்களாக வறண்ட வானிலை நிலவிய நிலையில் குறிப்பிடும் படியான மழைபொழிவு ஏதும் இல்லை. இதனால் வெயில் அதிகரித்து வெப்ப சலனம் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே, வட கிழக்கு பருவ மழைக்கு தேவையான கிழக்கு திசையில் இருந்து வீசுகின்ற காற்றின் போக்கும் மாறியுள்ளது. காற்று சுழற்சி மெல்லியதாக உருவாகும் சூழல் இருப்பதால், கடலோரப் பகுதியில் தற்போது லேசான காற்று சுழற்சி ஏற்பட்டுள்ளது.

இதனால், இன்று சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யும். 12ம் தேதி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், புதுவை, காரைக்கால் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும். சில இடங்களில் மிக கனமழை பெய்யும். பிற கடலோர மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களிலும் உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும் இடி மின்னலுடன் லேசான மழை பெய்யும். சென்னை, மற்றும் புறநகர் பகுதியில் இன்று பொதுவாக மேக மூட்டம் காணப்படும். நகரின் சிலஇடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும். இந்நிலையில், தமிழக கடலோரப் பகுதி, மன்னார் வளைகுடா பகுதிகளில் மணிக்கு 50 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். மீனவர்கள் இந்த பகுதிக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.


Tags : districts , 8 districts will receive heavy rains for 3 days
× RELATED மே மாதத்தின் முதல் 2 வாரங்களில் ஈரோடு,...