×

கேரளாவிலும் சிபிஐ -க்கு அனுமதி இல்லை.. மேற்கு வங்கம், மகாராஷ்டிராவைத் தொடர்ந்து சிபிஐ-க்கு செக் வைத்தது பினராயி அரசு!!

திருவனந்தபுரம் : ராஜஸ்தான், மேற்கு வங்கம், மகாராஷ்டிராவைத் தொடர்ந்து சிபிஐ-க்கு செக் வைத்தது கேரள அரசு. சிபிஐ( மத்திய புலனாய்வுத் துறை)க்கு வழங்கப்படும் வழக்குகளை விசாரிக்க நாட்டில் உள்ள எந்த மாநிலங்களுக்கும் சென்று தேவையான விசாரணை மேற்கொள்ள சிபிஐ அதிகாரிகளுக்கு பொது இசைவு வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அனுமதி பெறாமலே விசாரணைக்காக மாநிலங்களுக்குள் செல்லலாம். ஆனால் சிபிஐக்கு வழங்கப்பட்டு வந்த இந்த பொது இசைவை கடந்த சில காலங்களுக்கு முன்னர் ராஜஸ்தான், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்கள் திரும்ப பெற்றன.

அதே போல் அண்மையில் மகாராஷ்டிரா மாநிலத்திற்குள் விசாரணை நடத்த அனுமதியின்றி சிபிஐ அதிகாரிகள் நுழைய அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே தடை விதித்தார். மும்பை தொலைக்காட்சி டிஆர்பி முறைகேடு, சுஷாந்த் சிங் தற்கொலை வழக்கு என சிபிஐ மகராஷ்டிராவில் ஏகப்பட்ட வழக்குகளை சிபிஐ அங்கு விசாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில்,  ராஜஸ்தான், மேற்கு வங்கம், ஆந்திர பிரதேசம், மகாராஷ்டிராவைத் தொடர்ந்து சிபிஐ வழக்குப்பதிவு செய்வதற்கான அனுமதியை கேரள அரசும் ரத்து செய்துள்ளது.  கேரள அமைச்சரவையின் இந்த முடிவால் மாநில அரசின் ஒப்புதல் இன்றி சிபிஐ இனி வழக்குகளை விசாரிக்க முடியாது. விசாரணைகளுக்கு மாநில அரசின் அனுமதி பெற்றே சிபிஐ நடவடிக்கைகள் மேற்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக கேள்வி எழுப்பிய போது, மத்திய புலனாய்வுத் துறையின் மீதான நம்பிக்கையை நாங்கள் இழந்துவிட்டோம். மேலும் மத்திய புலனாய்வுத் துறை அதிகாரிகளின் மத்தியில் நிலவி வரும் அதிகாரப் போர் அதற்கு முக்கிய காரணமாகும் என்றும் குறிப்பிட்டிருக்கின்றது அம்மாநிலங்கள்.மேலும் மத்திய புலனாய்வுத் துறையின் அதிகாரங்களை மத்திய அரசு, எதிர்க்கட்சிகள் மீது தவறாக பயன்படுத்தி வருகிறது என்றும் குற்றம் சாட்டியுள்ளனர்.

Tags : CBI ,Kerala , Kerala, CBI, Permit, No, West Bengal, Maharashtra, Binarayi, Govt
× RELATED நூஹ் பலாத்கார வழக்கு 4...