கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து ஆய்வு செய்ய முதல்வர் பழனிசாமி வரும் 6-ம் தேதி திருப்பூர், நீலகிரி சுற்றுப்பயணம்.!!!

சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிசாமி மாவட்டம் தோறும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கொரோனா நோய் பரவல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும், மாவட்டங்களில் நடைபெறும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்தும் மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் அனைத்து துறை அரசு அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். இதன்படி, கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து நேரில் ஆய்வு செய்ய திருப்பூர், நீலகிரி மாவட்டங்களுக்கு வரும் 6-ம் தேதி வெள்ளிகிழமை முதல்வர்  எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

இரு மாவட்டங்களுக்கு செல்லும் முதல்வர் பழனிசாமி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வளர்ச்சிப் பணிகள் குறித்தும், கொரோனா தடுப்பு பணிகள் குறித்தும் மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் அனைத்து துறை அரசு அலுவலர்களுடன்  ஆய்வு  மேற்கொள்ளவுள்ளார். இந்த பயணத்தின்போது, முதல்வர் பழனிசாமி முடிவடைந்த பணிகளை திறந்து வைக்கிறார். புதிதாக தொடங்கப்படவுள்ள திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டவுள்ளார். மேலும், அரசு திட்டங்கள் மூலம் பயனடைந்த பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கவுள்ளார். இந்த நிகழச்சியில் முதல்வர் பழனிசாமியுடன் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories:

>