- மு.கே ஸ்டாலின்
- திமுக
- சட்டமன்ற
- கட்சி
- ஆர்.எஸ்.பார்தி
- சென்னை
- ஜனாதிபதி
- மு.கே ஸ்டாலின்
- கவர்னர்
- பன்விலலாளர் புரோகித்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- திமுக சட்டவாக்கக் கட்சி
- மு.கே ஸ்டாலின்
- தின மலர்
சென்னை: தமிழகத்தில் 133 எம்எல்ஏக்களின் ஆதரவு கடிதத்தை திமுக தலைவர் மு.க ஸ்டாலின் நேற்று ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்து வழங்கி ஆட்சி அமைக்க உரிமை கோரினார். இதுகுறித்து திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி நிருபர்களிடம் கூறியதாவது: திமுக சட்டமன்ற கட்சி தலைவராக மு.க.ஸ்டாலின் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்ட தீர்மானத்தை முறைப்படி ஆளுநரிடத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும், அவருடன் வந்த பொதுச் செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மை செயலாளர் கே.என்.நேரு உள்ளிட்ட நாங்கள் 5 பேர் கொடுத்தோம். தேர்வு செய்யப்பட்ட அந்த தீர்மானத்தை கொடுத்த போது, ஆளுநர் மகிழ்ச்சியோடு மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்தார். பதவி ஏற்புக்குரிய அறிவிப்பை நான் உங்களுக்கு அனுப்புகிறேன் என்று கூறினார். அவர் அழைத்த பின்பு பதவி பிரமாணம் நடைபெறும். எப்போது என்பதை கவர்னர் தான் அறிவிப்பார். இவ்வாறு அவர் கூறினார்….
The post திமுக சட்டமன்ற கட்சி தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்ட தீர்மானத்தை கவர்னரிடம் வழங்கினோம்: ஆர்.எஸ்.பாரதி பேட்டி appeared first on Dinakaran.