குலசேகரன்பட்டினம் கோயில் வளாகத்தில் மகிஷா சூரசம்ஹாரம்

உடன்குடி: தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன் பட்டினம் முத்தாரம்மன் கோயிலில், தசரா திருவிழா 17ம்தேதி துவங்கியது. தினமும் ஆன்லைனில் பதிவு செய்தவர்களில் 8 ஆயிரம் பேருக்கு மட்டுமே தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டது. வழக்கமாக 10ம் திருநாளில் கடற்கரையில் லட்சகணக்கானோர் மத்தியில் சிகர நிகழ்ச்சியான மகிஷா சூரசம்ஹாரம் நடைபெறும். ஆனால், கொரோனா பரவல் காரணமாககோயில் வளாகத்திலேயே இன்று அதிகாலை மகிஷா சூரசம்ஹாரம் நடந்தது. இதில் பக்தர்கள் பங்கேற்க அனுமதி மறுக்கப்பட்டது.

Related Stories:

>