முதல் முறை கார், பைக் வாங்குவோர் எண்ணிக்கை அதிகரிப்பு.: கொரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு விற்பனை உயர்வு

சென்னை: கொரோனா பெருந்தொற்று காரணமாக முதல் முறை கார், பைக் வாங்குவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு முதல் வீழ்ச்சியை சந்தித்து வந்த ஆட்டோமொபைல் துறை கொரோனா தொடக்க காலத்தில் பெரும் சரிவை கண்டது. ஆனால் வாகன நிறுவனங்களின் சலுகைகள், கொரோனா அச்சம் ஆகியவை பொது போக்குவரத்தை பயன்படுத்தியவர்களை சொந்தமாக கார், பைக்-ஐ வாங்க வைத்துள்ளது.  

நெரிசலில் ரயில் மற்றும் பேருந்துகளில் பயணித்து கொரோனா நோயை தொற்றிக்கொள்ள வேண்டுமா என்ற அச்சம், முதல் முறை கார் மற்றும் பைக் வாங்க உந்தி இருக்கிறது. இதுவரை ஆடம்பரமாக இருந்த கார் தற்போது அத்தியாவசியமாக மாறியிருக்கிறது.

மக்கள் சிந்தனையில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றம் ஆட்டோமொபைல் துறைக்கு சாதகமாகியிருக்கிறது. கடந்த நிதி ஆண்டோடு ஒப்பிடும்போது, நடப்பு நிதி ஆண்டின் முதல் 6 மாதத்தில் முதல் முறை கார் வாங்குபவர்களின் எண்ணிக்கை 50%-மாக உயர்ந்துள்ளது. மேலும் முதல் முறை இரு சக்கர வாகனம் வாங்குவோர் எண்ணிக்கை 75%-மாக அதிகரித்துள்ளது.

அதே நேரத்தில் பழைய கார் கொடுத்து புதிய கார் வாங்குபவர்கள் எண்ணிக்கை 27%-த்தில் இருந்து 19%-மாக குறைந்துள்ளது. அதேபோல கொரோனா பொது முடக்கத்தால் வருவாய் வாய்ப்பு குறைந்துள்ளதால் டேக்ஸி வாங்குவோர்  எண்ணிக்கையும் 8-9% -த்தில் இருந்து 3-4%-மாக வீழ்ச்சி அடைந்துள்ளது.

Related Stories:

>