×

தேர்தல் பிரசார கூட்டத்தில் தேஜஸ்வி மீது செருப்பு வீச்சு : பீகாரில் பரபரப்பு

அவுரங்காபாத்,:பீகாரில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் தேஜஸ்வி யாதவ் மீது, கூட்டத்தில் இருந்தவர்கள் செருப்பு வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது. பீகார் சட்டப்பேரவை தேர்தல் 3 கட்டங்களாக நடைபெற உள்ள நிலையில், முதல்வர் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம், பாஜக ஒரு அணியாகவும் ராஷ்டீரிய ஜனதா தளம் தலைமையில் மெகா கூட்டணியையும், சிராக் தலைமையிலான அணியும் மோதுகின்றன. முன்னாள் முதல்வர் லாலு மகன் தேஜஸ்வி யதவ் மெகா கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக உள்ளார். நேற்று அவுரங்காபாத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் அவர் கலந்து கொண்டார்.

அப்போது மேடையில் தேஜஸ்வி யாதவ் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் அமர்ந்து இருந்தனர். அப்போது, கூட்டத்தில் இருந்த ஒரு நபர், தேஜஸ்வி யாதவை நோக்கி செருப்புகளை வீசினார். அவரின் இடதுபக்க தோள் அருகே பறந்த செருப்பு, அதிர்ஷ்டவசமாக அவர் மீது படவில்லை. 2வது செருப்பு அவரது மடியில் வந்து விழுந்தது. இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவத்திற்குப் பிறகு, உடனடியாக செருப்புகளை வீசிய நபர் அடையாளம் காணப்பட்டார். அவரை, அங்கிருந்தவர்கள் மீட்டு போலீசில் ஒப்படைத்தனர்.

Tags : election campaign rally ,Tejaswi ,Bihar , Election campaign, Tejaswi, sandals, range, Bihar, excitement
× RELATED பண பலம், அதிகார பலத்தை பயன்படுத்தி...