மாநகர செய்தி துளிகள்...

105 கிலோ குட்கா பறிமுதல்: கோட்டூர்புரம் பகுதியில் உள்ள கடைகளுக்கு குட்கா பொருட்களை சப்ளை செய்து வந்த அடையாறு இந்திரா நகரை சேர்ந்த பிரபாகரனை (38) போலீசார் கைது செய்து, 105 கிலோ குட்காவை பறிமுதல் செய்தனர்.

மெக்கானிக் தற்கொலை: அசோக் நகர் 35வது தெருவை சேர்ந்த கார் மெக்கானிக் அருண் (29), மனைவி இறந்த துக்கத்தில், மனமுடைந்து நேற்று முன்தினம் இரவு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

வாலிபரை கொல்ல முயற்சி: பாடி வடக்கு மாட வீதியை சேர்ந்த கார்பெண்டர் வித்யாசேகரை (24), மது போதை தகராறில் ஸ்பேனரால் தலையில் அடித்து கொல்ல முயன்ற அவரது நண்பர்கள் ஆவடி காமராஜர் நகர் கணபதி கோயில் தெருவை சேர்ந்த கார்த்திக் (38), பாடி பஜனை கோயில் தெருவை சேர்ந்த சதீஷ் (28) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

கோயம்பேடு மார்க்கெட்டில் தீ: கோயம்பேடு மார்க்கெட்டில் கடந்த மாதம் அடுத்தடுத்து 3 கடைகளில் தீவிபத்து ஏற்பட்டது. அதை தொடர்ந்து, கடந்த 2 நாட்களுக்கு முன், பழ மார்க்கெட்டில் உள்ள ஒரு கடையில் தீவிபத்து ஏற்பட்டது. ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். தொடர்ச்சியாக தீவிபத்து ஏற்படுவதால், மர்ம நபர்களின் சதிவேலையா என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

 செல்போன் கொள்ளையர்கள் கைது: அரும்பாக்கம், வில்லிவாக்கம், கோயம்பேடு உள்ளிட்ட பகுதிகளில் செல்போன் பறிப்பில் ஈடுபட்டு வந்த அயனம்பாக்கம் மகாத்மா தெருவை சேர்ந்த பொன்னரசன் (21), சபரி (21), ஆகாஷ்குமார் (21) ஆகியோரை போலீசார் கைது செய்து, 26 செல்போன்கள், 2 பைக்குகளை பறிமுதல் செய்தனர்.

போக்சோவில் ரவுடி கைது: டி.பி.சத்திரம் பள்ளி சாலையை சேர்ந்த மாற்றுத்திறனாளி சிறுமிக்கு தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், அதே பகுதியை சேர்ந்த பிரபல ரவுடி லிங்கம் (எ) கணேசனை (30) போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Related Stories:

>