×

அரசு வேலை கிடைத்ததால் வேறு பெண்ணை மணக்க முயற்சி காதலன் திருமணத்தை தடுத்து நிறுத்தி அவரையே கைபிடித்த பட்டதாரி பெண்: கெங்கவல்லியில் பரபரப்பு

கெங்கவல்லி: கெங்கவல்லி அருகே அரசு வேலை கிடைத்ததால் ஏமாற்றிய காதலனின் திருமணத்தை தடுத்து நிறுத்தி, பட்டதாரி பெண் அவரையே கைப்பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே ஒதியத்தூரை சேர்ந்த ராஜ் மகன் ராஜ்குமார்(35). இவர் நடுவலூர் தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்த போது, இந்திரா நகர் காலனியை சேர்ந்த துரைசாமி மகள் அன்பரசி(29) என்பவரை,  காதலித்து வந்தார். இந்நிலையில், கடந்த 6 மாதத்துக்கு முன்பு ராஜ்குமாருக்கு ஓசூரில் வருவாய்த் துறையில் சர்வேயராக அரசு பணி கிடைத்தது. அரசு வேலை கிடைத்தவுடன் அன்பரசியை கை கழுவ முடிவு செய்த ராஜ்குமார், தனது அக்கா மகளை திருமணம் செய்து கொள்வதற்கான ஏற்பாடுகளை செய்து வந்தார்.

இதுகுறித்து தகவலறிந்த அன்பரசி, தன்னை காதலித்து ஏமாற்றி விட்டதாக ராஜ்குமார் மீது கெங்கவல்லி போலீசில் புகாரளித்தார். புகாரின்பேரில் எஸ்ஐ முருகேசன் விசாரணை நடத்தியதில், ராஜ்குமார் அன்பரசியை காதலித்து ஏமாற்றியது தெரிய வந்தது. இதையடுத்து, இரு தரப்பினரையும் அழைத்து பேச்சு வார்த்தை நடத்தியதில், ராஜ்குமார் அன்பரசியை திருமணம் செய்து கொள்ள ஒப்புக்கொண்டார். இதையடுத்து, கெங்கவல்லி முருகன் கோயிலில் நேற்று இருவருக்கும் திருமணம் நடந்தது. இதை தொடர்ந்து, கெங்கவல்லி எஸ்ஐ முருகேசன் இது தரப்பினரிடமும் எழுத்துப் பூர்வமாக ஒப்புதல் வாங்கிக்கொண்டு  அன்பரசியை கணவருடன் அனுப்பி வைத்தார். ஏமாற்றிய காதலனை, பட்டதாரி இளம்பெண் போராடி கைப்பிடித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags : Government job, another girl, trying boyfriend The, graduate girl
× RELATED பெண்ணை பலாத்காரம் செய்ய முயற்சி: வாலிபர் கைது