பதிவுத்துறையில் செய்யப்படும் திருமணம், பிறப்புச் சான்றிதழ்களை சரிபார்க்க தமிழக அரசு புதிய இணையதள சேவை

சென்னை : பதிவுத்துறையில் செய்யப்படும் திருமணம் மற்றும் பிறப்புச் சான்றிதழ் ஆகியவற்றை சரிபார்க்க புதிய இணைய தள சேவையை தமிழக அரசு அறிவித்துள்ளது.இது குறித்து தமிழக அரசின் செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: இந்திய குடிமக்கள் மற்றும் வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள், தங்களது திருமணம் மற்றும் பிறப்பு சான்றிதழை சரிபார்க்க தேசிய தகவல் மையம் மூலம்உருவாக்கப்பட்டுள்ள இணையவழியில் மிக எளிமையான முறையில், விண்ணப்பித்து சான்றொப்பம் பெறலாம். மாவட்ட பதிவாளர்கள், சார்பதிவாளர்களால் வழங்கப்பட்ட திருமணம் மற்றும் பிறப்புச் சான்றிதழை சரிபார்ப்பதற்கு சம்பந்தப்பட்ட அலுவலகத்திற்கு நேரடியாக செல்லத்தேவையில்லை.

சான்றொப்பத்தினை மின் ஒப்பம் மூலம் பெற்றுக் கொள்ளலாம்.இத்தளத்தில் பதிவுத் துறையும் இணைந்து ஆன்லைன் மூலம் இணைவதற்கு தமிழக அரசின் அனுமதி கிடைக்கப்பட்டு இணைய முகப்பு வழங்கப்பட்டுள்ளது. இச்சேவை 12-9-2020 பதிவுத்துறையில் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. eSanad.nic.in என்ற வலைதளத்தில் இச்சேவை தொடர்பான தகவல்களைப் பெறலாம். இவ்வாறு அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>