×

ஜெனரேட்டர்கள் பயன்படுத்த தடை.. குப்பை, மரக்கட்டைகளை எரித்தால் அபராதம்,, காற்று மாசுவை குறைக்க டெல்லி அரசு அதிரடி நடவடிக்கை!!

டெல்லி : டெல்லியில் காற்று மாசு அதிகரித்துள்ளதால், ஜெனரேட்டர்கள் பயன்படுத்த அம்மாநில அரசு தடைவிதித்துள்ளது. இந்தியாவின் தலைநகரான டெல்லி காற்று மாசுவால் அவதிப்பட்டு வருகிறது. டெல்லியை சுற்றியுள்ள ஹரியானா, பஞ்சாப், உத்தர பிரதேச மாநிலத்தில் விவசாய கழிவுகள் எரிக்கப்படுவதாலும், போக்குவரத்தாலும் காற்று மாசுவின் தரம் மிகவும் மோசமான நிலையை அடைந்துள்ளது.கொரோனா காலத்தில் போக்குவரத்திற்கு கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருந்ததால் காற்று மாசு குறைந்திருந்தது. தற்போது தளர்வுகள் அளித்துள்ள நிலையில் வாகன போக்குவரத்து அதிகரித்துள்ளது.

நேற்று டெல்லியில் காற்று மாசு மோசமாக இருந்தது. இதனால் இன்று முதல் இருந்து மின்சாரத்திற்காக டீசல், பெட்ரோல், கெரோசின் ஆகியவற்றால் பயன்படுத்தப்படும் ஜெனரேட்டர்களுக்கு தடைவிதிக்கப்படுகிறது என்று டெல்லி மாசு கட்டுப்பாட்டு குழு அதிரடி தடைவிதித்துள்ளது. ஆனால் அத்தியாவசிய மற்றும் அவசர சேவைகளுக்கு பயன்படுத்தலாம் எனத் தெரிவித்துள்ளது. மேலும் காற்றின் தரம் மோசமடைந்துள்ளதால் பெரிய கட்டுமான பணிகளுக்கும் தடை விதித்துள்ள மாசுக்கட்டுப்பாட்டு குழு, பனிப்பொழிவு ஆரம்பித்துள்ளதால் சாலையோரம் குப்பை, மரக்கட்டைகளை எரித்தால் அபராதம் விதிக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது.

காற்று மாசுபாடு குறித்து ராஜ்பாத்தில் நடைபயிற்சி மேற்கொண்ட டெல்லி வாசி ஒருவர் கூறுகையில், தலைநகரில் காற்று மாசுபாடு குறைந்து வருகிறது.  அண்டை மாநிலங்களில் விவசாயக் கழிவுகள் தீ வைத்து எரிக்கப்படுவதால் டெல்லியில் காற்று மாசு அபாய அளவைத் தாண்டியுள்ளது. இதற்கு அரசு தீர்வு காணவேண்டும் என்றார்.காற்று மாசுபாடு தீவிரம் காரணமாக டெல்லியில் காலையில் நடைப்பயிற்சிக்கு செல்வோர் மற்றும் பணிக்குச் செல்லும் மக்கள் முக கவசம் அணிந்து சென்றனர்.

Tags : Delhi , Generators, ban, garbage, timber, fines, Delhi government
× RELATED அமலாக்கத்துறை சட்டத்துக்கு மேலான...