×

நரகத்தில் வாழும் நீலப் பட நடிகர்கள்!

நன்றி குங்குமம்

உலகிலேயே ஜாலியான மனிதர்கள், கொடுத்து வைத்தவர்கள், வாழ்ந்தால் இவர்களைப்போல வாழணும், கரும்பு தின்ன லட்சக்கணக்கில் கூலி... என ஆபாசப் படங்களில் நடிக்கும் ஆண்களின் மீது பொறாமைப் படாதவர்களே இல்லை. அந்தளவுக்குத் திரையில் அவர்களின் ஆதிக்கம் இருக்கும். ஆனால், நிஜத்தில் அவர்களின் நிலை இருள் சூழ்ந்த நரகம்; வெளியில் தெரியாத அவலம். கை நீட்டி பணத்தைப் பெற்றுவிட்டோம். ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுவிட்டோம். இதிலிருந்து வெளியேறினால் வேறு வேலையில்லை என்று பல்லைக் கடித்துக்கொண்டுதான் பல ஆண்கள் இத்துறையில் குப்பை கொட்டிக் கொண்டிருக்கிறார்கள். விதிவிலக்காக சிலர் மட்டுமே தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கிறார்கள். அப்படி இயங்குபவர்களில் பெரும்பாலானவர்கள் பாலியல் அடிமைகள். இப்போது புதிதாக ஆண்கள் இந்தத் துறைக்குள் நுழைய அவ்வளவாக ஆர்வம் காட்டுவதில்லை. சமீபத்தில் கூட ஜப்பானில் ஆபாசப் படங்களில் நடிக்க ஆண்கள் பெரிதாக முன் வராததால் அங்கே ஆபாசப் படத்துறை நஷ்டத்தில் உழல்வதாக ஒரு செய்தி உலாவியது.   ‘இயக்குநரால் சாவி கொடுக்கப்பட்ட மாமிச பொம்மைபோல இயங்க வேண்டும். எங்களை யாரும் மனிதர்களைப் போல அணுக மாட்டார்கள்.

பல வீடியோக்களில் முகத்தைக் கூட காட்டமாட்டார்கள்...’’ என்று கவலையுடன் சொல்கிறார் புகழ்பெற்ற ஆபாசப் பட நடிகர் ஜேம்ஸ் டீன். பெண்களைப் போல சுலபமாக ஆண்களால் ஆபாசப் பட உலகுக்குள் நுழைய முடியாது. அதற்கு நிறைய தகுதிகளைக் கோரி நிற்கிறது போர்ன் உலகம். குறிப்பாக, தொப்பையற்ற நல்ல உடற்கட்டும் அந்தரங்க உறுப்பின் அளவு அதிகமாகவும் இருக்க வேண்டும். அந்த இடத்தில் சிறு காயம் கூட ஏற்பட்டிருக்கக் கூடாது. அளவில் கொஞ்சம் முன்ன பின்ன இருந்தாலும் பரவாயில்லை. இதற்காக அந்தரங்க உறுப்பை பெரிதாக்கும் அறுவை சிகிச்சை கூட சிலர் செய்துகொள்கின்றனர். இது அவர்களுக்கு பிற்காலத்தில் பலவிதமான பக்கவிளைவுகளைக் கொண்டு வருகிறது. அடுத்த முக்கியமான தகுதி கேமராவை ஆன் செய்து, ஷாட் ரெடி என்று இயக்குநர் சொன்னவுடன் அடுத்த நொடியிலே ஆண் நடிகர் விறைப்புத் தன்மையைக் கொண்டு வர வேண்டும். நடிகர் எந்த மனநிலையில், சூழலில் இருக்கிறார் என்பது பொருட்டல்ல. இது சிரிப்பது, அழுவது போன்ற பலவிதமான உணர்வுகளை வெளிப்படுத்துவதை விடக் கடினம். மட்டுமல்ல; ஒரு மணி நேரம் ஓடக்கூடிய வீடியோவை பல பகுதிகளாகத்தான் எடுப்பார்கள். அதிலேயே நிறைய ஆரம்பமும் முடிவும் இருக்கும்.

அதனால் இயக்குநர் எப்போதெல்லாம் ஷாட் சொல்லி ஆண் நடிகரை ஃப்ரேமுக்குள் கொண்டு வருகிறாரோ அப்போதெல்லாம் அவர் விறைப்புத் தன்மையுடன் இருக்க வேண்டும். அப்படியிருந்தால் மட்டுமே ஓர் ஆணால் ஆபாசப் பட நடிகராக முடியும். விறைப்புத்தன்மை சற்று குறைந்தாலே வெளியே போகச் சொல்லிவிடுவார்கள். இந்த நீண்ட, தொடர்ச்சியான விறைப்புத் தன்மைக்காக எடுத்துக்கொள்ளும் மருந்துகள் பக்க விளைவுகளை மட்டுமல்லாமல் ஆண்மைத்தன்மையையும் குறைக்கிறது என மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள். இதுபோக, விறைப்புத்தன்மையை நீண்டநேரம் தொடர்ச்சி யாகக் கடைப்பிடிப்பதால் அந்தரங்க உறுப்பில் முறிவு ஏற்படவும் வாய்ப்பிருக்கிறது. தவிர, ஓர் ஆண் நடிகர் சராசரியாக ஒரு நாளைக்கு 5 டீ ஸ்பூனுக்கும் அதிக அளவிலான விந்தணுக்களை வெளியேற்றுகிறார். இது உடல் ரீதியாக பல பிரச்னைகளைக் கொண்டு வருகிறது. அத்துடன், எடுத்த படம் சரியாக வரவில்லை என்றால் மறுபடியும் முதலிலிருந்து எடுக்க ஆரம்பிப்பார்கள். இடையில் 10 அல்லது 15 நிமிட ஓய்வு கிடைக்கும். கிட்டத்தட்ட ஒரு நாளைக்கு 2 முதல் 5 மணி நேரம் விறைப்புத்தன்மையிலேயே ஆண் நடிகர் இருக்க வேண்டும்.

இந்நிலை ஆண்களுக்கு செக்ஸ் மீதான ஆசையையே சிதைக்கிறது என்கிறார்கள் உளவியல் மருத்துவர்கள். இதுபோக அவர்கள் மாதம் ஒரு முறை எய்ட்ஸ் உட்பட பாலியல் நோய்களுக்கான சோதனைகள் செய்யவேண்டும். உடலில் எந்தப் பிரச்னையும் இல்லையென்றால்தான் அவர்களால் தொடர்ந்து நடிக்க முடியும்.  இவ்வளவுக்குப் பிறகும் ஆபாசப் படங்களில் நடிக்க தேர்வாகிவிட்டால் முதலில் குறைவான சம்பளம்தான். எவ்வளவு கடினப்பட்டு ஆபாசப் படத்தில் நடிப்பதற்கான தகுதியை  வளர்த்துக்கொண்டாலும் பெரும்பாலும் ஆண் நடிகரை விட பெண்ணே திரையில் முன்னிறுத்தப்படுவாள். அவளைச் சுற்றியே காட்சிகள்அமையும். இதனால்தான் ஆண் நடிகர்கள் மக்கள் மத்தியில் அவ்வளவாக பிரபலம் ஆவதில்லை. அவர்கள் ஓர் இயந்திரம் போல ஆபாசப் படங்களில் செயல்படுவதால் அது தாம்பத்ய உறவில் பாதிப்பை நிகழ்த்துகிறது.உதாரணத்துக்கு, ஆபாசப் பட உலகில் கொடிகட்டிப் பறக்கும் ஒரு நட்சத்திரம் கெய்ரன் லீ. இவரது நிஜப் பெயர் ஆடம் டிக்‌ஷா. இவரது அந்தரங்க உறுப்பு ஒரு மில்லியன் டாலருக்கு இன்ஷூர் செய்யப்பட்டுள்ளது. 3500க்கும் மேற்பட்ட வீடியோக்களில் நடித்துள்ளார். அதிக சம்பளம் பெறும் ஆபாசப் பட நடிகர்களில் இவரும் ஒருவர். ஒரு நாளைக்கு இவருக்கு சம்பளம் 4 ஆயிரம் டாலர். அதாவது சுமார் 3 லட்ச ரூபாய். ஆபாசப் பட நடிகர்களுக்காக வழங்கப்படும் விருதுகளை பலமுறை அள்ளியிருக்கிறார்.

விறைப்புத்தன்மை குறையாமல் ஒரு மணி நேரம் கூட இவரால் நடிக்க முடியும். விஷயம் இதுவல்ல. கேமரா முன்னால் மணிக்கணக்கில் மன்மத விளையாட்டில் ஈடுபடும் இவரால் வீட்டில் மனைவியுடனான தாம்பத்யத்தில் ஜொலிக்க முடிவதில்லை. ‘‘மனைவியைத் திருப்திப் படுத்த முடியாமல் படுக்கையில் ரொம்பவே பரிதாப நிலையில் இருக்கிறேன்...’’ என்று வேதனையுடன் சொல்கிறார் லீ. இதுபோக மனச்சோர்வு, போதைக்கு அடிமையாகுதல், குடும்ப வாழ்விலிருந்து அந்நியமாகுதல் போன்ற நிலைகளுக்கும் ஆண் நடிகர்கள் தள்ளப்படுகிறார்கள். கடந்த இருபது வருடங்களில் தற்கொலை, கொலை, அதிகளவிலான போதை, விபத்து, எய்ட்ஸ் உட்பட பலவிதமான உத்பாதங் களினால் 130க்கும் மேற்பட்ட ஆபாசப் பட நடிகர்கள், நடிகைகள் இறந்துள்ளனர். இப்படி இறந்தவர்களில் ஆண்களே அதிகம். ஓர் அமெரிக்கனின் அதிகபட்ச சராசரி வாழ்நாள் 78.1 வருடங்கள் என்றால் ஆபாசப் படங்களில் நடிப்பவர்களின் சராசரி வாழ்நாள் 37.43 வருடங்கள் மட்டுமே!  

தொகுப்பு: த.சக்திவேல்

Tags : film actors , Blue film actors living in hell!
× RELATED தென்னிந்திய திரைப்பட நடிகர் சங்க...