×

உலகின் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு பால் ஆர்.மில்க்ரோம், ராபர்ட் பி.வில்சன்-க்கு அறிவித்தது தேர்வுக்குழு

ஸ்டோக்ஹோம் : உலகின் உயரிய விருது நோபல் பல்வேறு துறை சார்ந்தவர்களுக்கு நோபல் விருதுகள் அளிக்கப்படுகின்றன. இந்த ஆண்டுக்கான விருதுகளின் அறிவிப்புகள் வெளிவர தொடங்கி விட்டன. உலகின் மிக உயரிய விருதுகளில் ஒன்றான நோபல் பரிசு, மருத்துவம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் ஆகிய 6 துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்பட்டு வருகிறது. 2020ம் ஆண்டு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு 2 பேருக்கு பகிர்ந்தளிக்கப்படுவதாக தேர்வுக்குழு அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏல முறைகள் குறித்த பொருளாதார ஆராய்ச்சிக்காக பால் மில்க்ரோம், ராபர்ட் வில்சன் ஆகிய இருவருக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. ஏலக் கோட்பாடின் மேம்பாடு மற்றும் ஏலத்திற்கான புதிய வடிவமைப்புகளை உருவாக்கியதற்காக நோபல் பரிசு அறிக்கப்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் ஏலக் கோட்பாட்டை மேம்படுத்தி புதிய ஏல வடிவங்களை கண்டுபிடித்துள்ளனர். இது உலகெங்கிலும் உள்ள விற்பனையாளர்கள், வணிகர்கள் மற்றும் வரி செலுத்துவோருக்கு பயன்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இயற்பியலுக்கான நோபல் பரிசு:

இயற்பியலுக்கான நோபல் பரிசு மூவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ரோஜர் பென் ரோஸ், ரிய்ன்ஹார்ட் கென்செல், ஆண்ட்ரியா கெஸ் கருந்துளைப் பற்றிய ஆய்வுக்காக இந்த விருது அளிக்கப்பட்டுள்ளது.

வேதியலுக்கான நோபல் பரிசு:


வேதியியலுக்கான நோபல் பரிசை ஜெனிபர் ஏ.டெளட்னா, இம்மானுவே சார்பென்டியர் ஆகிய இரு பெண்களுக்கு வழங்கப்படுகிறது.

இலக்கியத்திற்கான நோபல் பரிசு:

இலக்கியத்திற்கான நோபல் பரிசாக அமெரிக்க கவிஞர் லூயிஸூக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. பிழையில்லா கவித்துவக் குரலும், அழகும் பொருந்திய கவிதைகளுக்காக லீயிஸ் க்ளக்கிற்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

அமைதிக்கான நோபல் பரிசு:

2020ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு உலக உணவு திட்டம் என்ற அமைப்புக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் வறுமையில் வாடுபவர்களுக்காக 58 ஆண்டுகள் உணவு அளித்ததற்காக நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.


Tags : World Economy ,Robert P. Wilson ,Paul R. Milkrom , Nobel Prize in Economic Sciences, Paul R. Milkrom, Robert P. Wilson
× RELATED சிக்கனத்தின் இன்றியமையாமையை அனைவரும்...