×

கக்கநல்லா சோதனை சாவடியில் இபாஸ் இல்லாத வாகனங்களை திருப்பி அனுப்பும் போலீஸ்

கூடலூர்: கக்கநல்லா சோதனை சாவடியில் இ-பாஸ் இல்லாமல் வரும் வாகனங்களை  போலீசார் அனுமதி மறுத்து திருப்பி அனுப்பி வைக்கின்றனர். கொரோனா தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக நீலகிரி மாவட்டத்திற்கு வெளிமாநிலங்களில் இருந்து வருபவர்கள் உரிய முறைப்படி இபாஸ் பெற்று வர வேண்டும் என்ற கட்டாயம் உள்ளது. உள்ளூரில் இருந்து வெளி மாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களுக்கு செல்பவர்கள் திரும்பி வரும்போது ஆதார் அட்டைகளை அடையாளமாக காண்பித்து வர முடியும். இதேபோல் சுற்றுலாப் பயணிகளும் இபாஸ் பெற்று வர அனுமதி உள்ளது. ஆனால் வெளி மாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து இபாஸ்  கேட்டு விண்ணப்பிப்பவர்களுக்கு சிலருக்கு மட்டுமே நீலகிரி மாவட்டத்திற்கு நுழைவதற்கான இ பாஸ் கிடைப்பதாக கூறப்படுகிறது.

தற்போது அண்டை மாநிலமான கர்நாடகாவில் இருந்து ஏராளமான வாகனங்கள் தமிழககர்நாடக எல்லை கக்கநல்லா வழியாக நீலகிரிக்குள் வருகின்றன. இவ்வாறு வரும் வாகனங்களில் ஒரு சில வாகனங்களில் முறையாக இ பாஸ் இல்லாமல் நீலகிரிக்குள் வருவதற்காக எல்லையில் வருகின்றனர். அவ்வாறு வரும் வாகனங்களை தமிழக போலீசார் ஆய்வு செய்து முறையாக இபாஸ் பெற்று வராத வாகனங்களை திருப்பி அனுப்பி விடுகின்றனர். அத்துடன் இபாஸ் பெற்று வரும் வாகனங்களில் வருபவர்களையும் உள்ளூரில் இருந்து சென்று திரும்பி வருபவர்களையும் முறைப்படி ஆவணங்களை ஆய்வு செய்த பின்னரே மாவட்டத்திற்குள் அனுமதிக்கின்றனர்.

Tags : IPAs ,Kakkanalla , Cuddalore, Police, e-Pass
× RELATED தமிழக-கர்நாடக எல்லை கக்கநல்லா சோதனைச்...