×

கலைஞரின் 101-வது பிறந்தநாளையொட்டி மெரினாவில் உள்ள அவரது நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை

சென்னை: கலைஞரின் 101-வது பிறந்தநாளையொட்டி மெரினாவில் உள்ள அவரது நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். தமிழகம் முழுவதும் திமுக சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மறைந்த முதல்வரும், திமுக தலைவருமான கலைஞரின் 101வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் கலைஞரின் பிறந்தநாளை தமிழகம் முழுவதும் திமுகவினர் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடுவது வழக்கம்.

அதே போல் திமுக முன்னோடிகள் கவுரவிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் கலைஞரின் 101வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. அதனை தொடர்ந்து கோபாலபுரம் இல்லத்தில் உள்ள அவரது படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதனை தொடர்ந்து மெரினாவில் உள்ள அவரது நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். அப்போது மூத்த அமைச்சர்கள், எம்.பி-க்கள், திமுக நிர்வாகிகள் உடனிருந்தனர்.

பின்னர் கலைஞர் குறித்த புகைப்பட கண்காட்சியை பார்வையிட்டார். தொடர்ந்து அதனை தொடர்ந்து முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு நிறைவு சிறப்பு மலரை வெளியிட்டார்.

The post கலைஞரின் 101-வது பிறந்தநாளையொட்டி மெரினாவில் உள்ள அவரது நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,Marina ,K. ,Stalin ,Chennai ,K. Stalin ,Dimuka ,Tamil Nadu ,
× RELATED தமிழ்நாடு, ஆந்திரா மாநிலங்கள்...