×

தூதரகம் மூலமாக பல கோடி மதிப்புள்ள தங்கம் கடத்தல் காபிபோசா சட்டத்தில் சொப்னா மீது வழக்கு

திருவனந்தபுரம்: பல கோடி மதிப்புள்ள தங்கத்தை கடத்திய வழக்கில் கைது ெசய்யப்பட்டுள்ள சொப்னா மீது, காபிபோசா சட்டத்தின் கீழ் சுங்க  இலாகா வழக்குப்பதிவு செய்துள்ளது.கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தூதரகம் மூலமாக, வெளிநாடுகளில் இருந்து பல நூறு கோடி மதிப்புள்ள  தங்கத்தை பல ஆண்டுகளாக கடத்தி வந்த சொப்னா கும்பல் சமீபத்தில் சிக்கியது. அவர்கள் மீது சுங்க இலாகா, அமலாக்கத் துறை, வருமான  வரித்துறை, தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) போன்றவை வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றன. சொப்னா மீது சுங்க இலாகா ஏற்கனவே  வழக்குப்பதிவு செய்துள்ளது. இந்த வழக்கில் இவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. ஆனால், என்ஐஏ இவர் மீது பதிவு செய்த வழக்கு விசாரணையில்  இருப்பதால் அவர் வெளியே வர முடியவில்லை. இந்நிலையில், ேநற்று சொப்னா மீது சுங்க இலாகா காபிபோசா பிரிவில் வழக்குப்பதிவு செய்துள்ளது.

இதன்படி,  ஒரு ஆண்டு வரை அவரை விசாரணை இல்லாமல் சிறையில் வைத்திருக்கலாம். வழக்கமாக,  சுங்க இலாகா மற்றும் வருவாய் புலனாய்வு  துறை வழக்குகளில் கைது  செய்யப்பட்டவர்கள் ஜாமீனில் ெவளியே வந்த பின்னர்தான் காபிபோசா வழக்கு  பதிவு செய்யப்படும். ஆனால், சொப்னா  வெளியே வருவதற்கு முன்பாகவே அவர் மீது இந்த வழக்குப்பதிவு  செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே,  எர்ணாகுளம் நீதிமன்றத்தில் சுங்க இலாகா  நேற்று புதிய அறிக்கையை தாக்கல் ெசய்தது.  அதில், சொப்னா ஒரு லட்சத்து 90 ஆயிரம் அமெரிக்க டாலரை வெளிநாட்டிற்கு  கடத்தியதாகவும்,  அவருக்கு அந்த பணம் எப்படி கிடைத்தது  என்பது குறித்து  விசாரணை நடந்து வருவதாகவும் கூறப்பட்டுள்ளது. நேற்றும்,  சொப்னா உட்பட கைது  செய்யப்பட்டவர்களை சிறையில் வைத்து சுங்க இலாகா விசாரணை  நடத்தியது.

உயிருக்கு அச்சுறுத்தல்
தங்கம் கடத்தல் வழக்கில் 4வது முக்கிய நபரான சந்தீப் நாயர் அப்ரூவராக மாறியுள்ளார். இவர்   தங்கம் கடத்தல் தொடர்பான அனைத்து  விபரங்களையும் ரகசிய வாக்குமூலமாக  அளித்துள்ளார். இந்நிலையில், தனது உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதாகவும்,   திருச்சூரில் தற்போது  அடைக்கப்பட்டுள்ள மத்திய சிறையில் வைத்து தன்னை கொல்ல முயற்சி நடப்பதாகவும், தன்னை வேறு சிறைக்கு மாற்றும்படியும் நீதிமன்றத்தில்  அவர் தெரிவித்துள்ளார்.  இதுபோல்,  இந்த  வழக்கில் கைது செய்யப்பட்ட முஸ்தபா, அப்துல் அசீஸ் ஆகிய இருவரும்   என்ஐஏ.விடம் அப்ரூவராக  மாறியுள்ளனர். இவர்களும் தங்கம் கடத்தல் குறித்த   விபரங்களை தெரிவித்துள்ளனர். ேமலும், தங்கம் கடத்தலில் ‘உபா’ சட்டத்தின் கீழ்   கைது  செய்யப்பட்டவர்களை 6 மாதங்கள் நீதிமன்ற காவலில் வைக்க அனுமதிக்க   வேண்டும் என என்ஐஏ மனுதாக்கல் செய்துள்ளது.

சிவசங்கரிடம் 2ம் நாளாக விசாரணை
தங்க கடத்தல் தொடர்பாக, கடந்த சில தினங்களாக சுங்க இலாகா நடத்திய விசாரணையில் மூத்த ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கருக்கு எதிராக சில  முக்கிய தகவல்கள் கிடைத்தன. இதையடுத்து நேற்று முன்தினம் கொச்சி சுங்க இலாகா  தலைமையகத்தில் மீண்டும்  சிவசங்கரிடம் விசாரணை  நடந்தது. அவரிடம் காலை 11 மணிமுதல் இரவு 10 மணி வரை அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தினர். இதில், பல  முக்கிய விபரங்கள்  கிடைத்ததால் நேற்றும் அவரிடம் விசாரணை  நடந்தது. காலையில் தொடங்கி விசாரணை இரவு வரை தொடர்ந்தது.

சொப்னா நியமனம் பற்றி தெரியாது
கேரள அரசின் தகவல் தொழில்நுட்ப துறை கட்டுப்பாட்டில் உள்ள விண்வெளி பூங்கா திட்டத்தின் உயர் பதவியில் சொப்னா நியமிக்கப்பட்டு இருந்தார்.  முதல்வர் பினராய் விஜயனின் முதன்மை செயலாளராக இருந்த ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கரின் பரிந்துரையில் இந்த பதவி அவருக்கு  வழங்கப்பட்டுள்ளது. மத்திய அமலாக்கத் துறை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள குற்றப் பத்திரிகையில், ‘முதல்வருக்கு தெரிந்துதான் சொப்னா  நியமிக்கப்பட்டார்,’ என்று கூறப்பட்டுள்ளது. இது பற்றி பினராய் விஜயன் நேற்ற அளித்த பேட்டியில், ‘‘விண்வெளி பூங்கா திட்டத்தில் சொப்னாவுக்கு  பதவி வழங்கப்பட்டது பற்றி எனக்கு எதுவும் தெரியாது. இவரை நியமிக்க முதல்வரின் அனுமதி தேவையில்லை. இது தொடர்பாக சர்ச்ைசயான  பின்னர்தான் அவர் பதவியில் நியமிக்கப்பட்டது பற்றி எனக்கு தெரிய வந்தது,’’ என்றார்.

Tags : Sopna ,embassy , Smuggling of gold worth crores through embassies The case against Sopna in the Kapibosa Act
× RELATED லண்டன் இந்திய தூதரகம் மீது தாக்குதல்:...