×

விருதுநகர் சுற்றுப்புற ஊராட்சிகளில் தண்ணீருக்கு கண்ணீர் விடும் மக்கள்: அதள பாதாளத்திற்கு சென்றது நிலத்தடி நீர்மட்டம்

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் வடகிழக்கு பருவமழையை நம்பியே விவசாயமும், குடிநீர் ஆதாரங்களும் உள்ளன. ஜனவரி மாதம் துவங்கி இன்று வரை மாவட்டத்தில் விருதுநகர் மற்றும் சுற்றுப்பகுதி கிராமங்களில் நல்ல மழை பெய்யவில்லை. இதனால் விருதுநகர் மற்றும் ரோசல்பட்டி, சிவஞானபுரம், கூரைக்குண்டு ஊராட்சிகளில் நிலத்தடி நீர்மட்டம் 300 அடிக்கும் கீழ் சென்று விட்டது. ஊராட்சி மற்றும் நகராட்சிக்கான குடிநீர் ஆதாரங்கள் வற்றி, வறண்டு விட்டதால் தண்ணீர் தட்டுப்பாடு நிலவுகிறது.
தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டத்தின் மூலம் விருதுநகர் நகராட்சியில் 15 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வழங்கப்படுகிறது. விருதுநகரின் நடுமையத்தில் உள்ள தெப்பத்திலும் தண்ணீர் வேகமாக குறைந்து வருவதால் அவ்வையார் தெரு, பட்டுதெரு, பிள்ளையார் கோவில் தெரு, வாடியான் தெரு, மேற்கு ரதவீதி உள்பட பல ஏரியாக்களில் நிலத்தடி நீர்மட்டம் வற்றி விட்டது.

விருதுநகர் ஊராட்சி ஒன்றியத்திற்கான தாமிரபரணி கூட்டுக்கு குடிநீர் திட்டத்தை மார்ச் 1ல் முதல்வர் திறந்து வைத்த நிலையில், ரோசல்பட்டி ஊராட்சிக்கு தினசரி வரவேண்டிய 4லட்சம் லிட்டரில் 10 ஆயிரம் லிட்டருக்கும் குறைவான தண்ணீரே வந்து சேர்கிறது. ரோசல்பட்டி ஊராட்சியில் 40 நாட்களுக்கு முறையும் தண்ணீர் விநியோகம் செய்யப்படுகிறது. நிலத்தடி நீர்மட்டம் குறைந்து தெருக்களில், வீடுகளில் உள்ள போர்வெல்களில் தண்ணீர் வரத்து இல்லாத நிலையில் பிற உபயோகத்திற்கான
தண்ணீரை மக்கள் விலைக்கு வாங்கி பயன்படுத்துகின்றனர். வடகிழக்கு பருவமழை காலங்களில் பெய்யும் மழைநீரை சேமிக்கும் வகையில் கவுசிகா ஆற்றில் தடுப்பணைகள் கட்ட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Tags : Virudhunagar , Virudhunagar, water, tears, people
× RELATED விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி...