×

கொடைக்கானலில் இ-பாஸ் தொடர்பான சந்தேகங்களுக்கு 9442255737-ல் தொடர்பு கொள்ளலாம் : திண்டுக்கல் ஆட்சியர் அறிவிப்பு!!

திண்டுக்கல் : கொடைக்கானலில் இ-பாஸ் நடைமுறை இன்று முதல் அமலுக்கு வந்த நிலையில், இது தொடர்பான சந்தேகங்களை போக்கிக்கொள்வதற்காக தொலைபேசி எண்களை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில்,

“கொடைக்கானல் பகுதிக்கு வருகை தரும் அனைத்து வாகனங்கள் இ-பாஸ் பெற விண்ணப்பிப்பது தொடர்பாக ஏற்படும் சந்தேகங்களுக்கு 0451 2900233 என்ற தொலைபேசி எண்ணிலோ. 9442255737 என்ற கைபேசி எண்ணிலோ சம்பந்தப்பட்ட அலுவலர்களை தொடர்புகொள்ளலாம் : மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி. இ.ஆ.ப. அவர்கள் தகவல்.

சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவின்படி, திண்டுக்கல் மாவட்டம். கொடைக்கானல் பகுதிக்கு வருகை தரும் வெளி மாநிலம் மற்றும் வெளி மாவட்டம் உள்ளிட்ட அனைத்து வாகனங்கள் 07.05.2024 அன்று முதல் 30.06.2024 வரை இ-பாஸ்(ePass) பதிவு செய்து வர வேண்டும்.பயணிகள் “epass.tnega.org” என்ற இணைய முகவரியில் விபரங்களை பதிவேற்றம் செய்து இ-பாஸ் பெற்றுக்கொள்ளலாம். இ-பாஸ் பெற விண்ணப்பிப்பது தொடர்பாக ஏற்படும் சந்தேகங்கள் மற்றும் உள்ளூர் வாகனங்களுக்கு இ-பாஸ் (Local ePass பெறுவது தொடர்பாக ஏற்படும் சந்தேகங்களுக்கு 0451 2900233 என்ற தொலைபேசி எண் 9442255737 என்ற கைபேசி எண் வாயிலாக சம்பந்தப்பட்ட அலுவலர்களை தொடர்புகொண்டு தெரிந்து கொள்ளலாம்.”என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி. இ.ஆ.ப. அவர்கள் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post கொடைக்கானலில் இ-பாஸ் தொடர்பான சந்தேகங்களுக்கு 9442255737-ல் தொடர்பு கொள்ளலாம் : திண்டுக்கல் ஆட்சியர் அறிவிப்பு!! appeared first on Dinakaran.

Tags : Kodaikanal ,Dindigul ,Dinakaran ,
× RELATED கொடைக்கானல் மலைச்சாலையில் கார் மீது லாரி கவிழ்ந்து விபத்து