×

பல்லாவரம் ஜிஎஸ்டி சாலையில் பிரமாண்ட யானை பொம்மை : வாகன ஓட்டிகள் பிரமிப்பு

பல்லாவரம்,: பல்லாவரம் ஜிஎஸ்டி சாலையில் நேற்று அதிகாலை  சரக்கு வாகனம் ஒன்றில் பிரமிக்க வைக்கும் யானை உருவ பொம்மை கொண்டு செல்லப்பட்டது. அதனைப் பார்க்கும்போது, அச்சு அசலாக உயிருள்ள ஒரு யானையை சங்கிலியால் கட்டி, வாகனத்தில் கொண்டு செல்வதைப் போல் தெரியவே, அந்த வாகனத்தின் அருகே சென்று, யானையை காண பிற வாகன ஓட்டிகள் ஆர்வம் காட்டினர். அருகில் சென்று பார்த்தபோது தான், அது உயிருள்ள யானை அல்ல; உருவ பொம்மை என்று தெரியவந்தது. அச்சு அசலாக உயிருள்ள யானை போலவே காதுகளை ஆட்டிக்கொண்டே, துதிக்கையை அசைத்துக்கொண்டே  இருந்த யானை பொம்மையை அந்த வழியாக சென்ற பிற வாகன ஓட்டிகள் ஆச்சரியமாக பார்த்தவாறு கடந்து சென்றனர். பல்லாவரம் ஜிஎஸ்டி சாலை வழியாக சென்னையில் உள்ள வணிக வளாகம் ஒன்றிற்கு, விளம்பரத்திற்காக பிரத்யேகமாக தயாரித்து கொண்டு சென்றது தெரியவந்தது.

Tags : Pallavaram GST road ,Motorists , Pallavaram, GST, road, elephant, toy, motorists, awe
× RELATED பல்லாவரம் ஜிஎஸ்டி சாலையில் ரூ. 82 கோடி...