×

6 மாதத்திற்கு பிறகு பொன்மலை வாரச்சந்தை துவக்கம்: மாஸ்க் இல்லாதவர்களுக்கு அனுமதி மறுப்பு

திருச்சி: திருச்சி பொன்மலையில் வாரச்சந்தை ஒவ்வொரு வாரமும் ஞாயிறுக்கிழமைகளில் நடக்கும். இதில் சுமார் 700க்கும் மேற்பட்ட கடைகள் அமைக்கப்பட்டு விற்பனை நடக்கும். அப்பகுதி மக்கள் மட்டுமின்றி பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்களும் வந்து பொருட்களை வாங்கிச்செல்வார்கள். இந்நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் மாதம் இறுதி முதல் சந்தை செயல்படவில்லை. இதையடுத்து 6 மாதங்களுக்கு பிறகு நேற்று முதல் முறையாக சந்தை துவங்கி நடந்தது. குறைந்த அளவே சுமார் 200க்கும் மேற்பட்ட கடைகள் மட்டுமே போடப்பட்டது. மீன் தொட்டியில் விற்பனைக்காக வைக்கப்பட்ட வண்ண மீன்கள், முயல்கள், கிளி உள்ளிட்ட பறவைகள் என பல கடைகள் வைக்கப்பட்டிருந்தன.

இதில் சந்தையை ஏலம் எடுத்தவர்கள் சார்பில் ஒவ்வொரு கடையிலும் சானிடைசர்கள் வைக்க அறிவுறுத்தப்பட்டு வைக்கப்பட்டது. விற்பனையாளர்கள், பணியாளர்கள், பொதுமக்கள் என அனைவரும் மாஸ்க் கட்டாயம் அணிய அறுவுறுத்தப்பட்டது. மாஸ்க் இல்லாதவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. மேலும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்கும் வண்ணமாக ஒவ்வொரு கடை முன்பும் கோலமாவு மூலம் வட்டம் போடப்பட்டது. அதனை பொதுமக்களும் பின்பற்றி சமூக இடைவெளியுடன் பொருட்களை வாங்கிச்சென்றனர்.

Tags : Ponmalai , 6 months, Ponmalai weekly market, no mask, denial of permission
× RELATED பொன்மலை ரயில்வே பணிமனையில் வேலைநேரம்...