×

புதிர் போட்டி இந்தியில் நடைபெறுவதற்கும் பள்ளிக்கல்வித்துறைக்கும் தொடர்பு இல்லை: அமைச்சர் செங்கோட்டையன் நழுவல்

ஈரோடு,: பள்ளி மாணவர்களுக்கான புதிர் போட்டி ஆங்கிலம், இந்தியில் நடைபெறும் என்று கூறியிருப்பதற்கும், தமிழக பள்ளிக்கல்வித்துறைக்கும் எந்த  தொடர்பும் இல்லை என்று அமைச்சர் செங்கோட்டையன் நழுவினார்.ஈரோட்டில் பள்ளிக் கல்வித்துைற அமைச்சர்செங்கோட்டையன், நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் பள்ளிகள் திறப்பதற்கான சூழல் தற்போதைக்கு இல்லை. அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு  வழங்குவதற்கு தேவையான பாடப்புத்தகங்கள் கூடுதலாகவே மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.  மாணவர்களுக்கு இலவச லேப்டாப் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. இந்தாண்டு இலவச லேப்டாப் கொள்முதல் செய்வதற்கான டெண்டர்  கொரோனா காரணமாக தாமதமாகி வருகிறது.

தமிழகத்தில் மலைக்கிராமங்கள் உள்பட 52 பின்தங்கிய கிராமங்களில் இணையதள சிக்னல் கிடைக்காமல் உள்ளதால் ஆன்லைன் வகுப்புகள் நடத்த  முடியாத நிலை உள்ளது. இதை சரி செய்வதற்காக குழு அமைக்கப்பட்டு விரைவில் ஆன்லைன் வகுப்புகள் நடத்துவதற்கான நடவடிக்கை  எடுக்கப்படும்.காந்தி ஜெயந்தியையொட்டி தேசிய கல்வி மற்றும் ஆராய்ச்சி மையம் சார்பில் பள்ளி மாணவர்களுக்கான புதிர் போட்டி ஆங்கிலம், இந்தியில்  நடைபெறும் என்று கூறியிருப்பதற்கும், தமிழக பள்ளிக்கல்வித்துறைக்கும் எந்த தொடர்பும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.



Tags : Senkottayan ,school education , Puzzle competition to be held in Hindi No connection to school education: Minister Senkottayan slips
× RELATED பயிலும் பள்ளியிலேயே வங்கிக் கணக்கு...