×

இன்று சர்வதேச முதியோர் தினம்…. முதியோர்களை ஒதுக்காமல் அன்பு பாராட்டுங்கள்

முதியோரை மேன்மைப்படுத்தும் நோக்கத்தில் 1990  அக்டோபர் 1ம் தேதியை உலக முதியோர் தினமாக ஐ.நா. அறிவித்தது. 2002ஆம் ஆண்டிலிருந்து, சர்வதேச அளவில் முதியோருக்கான செயல்பாட்டுத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. முதியோர் சுதந்திரம், பங்களிப்பு, வயதானவர்களை மதித்தல் போன்றவை உலக முதியோர் தினத்தின் முக்கிய நோக்கமாகும்.வயதானவர்களின் அனுபவங்கள் இளைய தலைமுறையினருக்கு அவசியமானவை. ஆனால் எத்தனை பேர் இதனை உணர்ந்திருக்கின்றனர். பெற்றோர்களையும், வயதானவர்களையும் பாரம் என்று கருதி முதியோர் இல்லங்களுக்கு கொண்டுபோய் விட்டுவிட்டு வந்துவிடுகின்றனர்.

இதனால் வயதானவர்களுக்கு தனிமையும், வெறுமையுமே மிஞ்சுகிறது. வயதானவர்களை குழந்தைகளைப் போல பாவித்து அவர்களுக்குரிய சுதந்திரத்தையும், மதிப்பையும் அளிக்கவேண்டும்.

சத்தான உணவுகள்
குழந்தைகளுக்கு எந்த அளவிற்கு ஆரோக்கியமான உணவுகளை செய்து கொடுப்போமோ அதேபோல வயதானவர்களுக்கும் ஆரோக்கியமான உணவுகளை செய்து தரவேண்டும்.  வயதானவர்களுக்கு எலும்புத் தேய்மானம், நீரிழிவு, இதயநோய், போன்றவற்றால் அவர்களுக்கு ஊட்டச்சத்துள்ள உணவுகளை கொடுக்கவேண்டும். நார்ச்சத்துள்ள,  காய்கறிகள், பழங்களை தரவேண்டும். மறதிநோய் உள்ள வர்களை சிறப்புடன் கவனத்துடன் கையாளவேண்டும்.

பிள்ளைகளின் கடமைகள் முதியோர் விலைமதிக்க முடியாத செல்வம். அவர்களை அங்கீகரிக்க வேண்டும்
* அவர்களின் உணர்வுகளை,
கவலைகளைப் புரிந்துகொள்ள வேண்டும்
* அவர்கள் குடும்பத்தினரால் நேசிக்கப்படுவதை புரியவைக்க வேண்டும்
* சுகாதாரப் பராமரிப்பையும் நல மேம்பாட்டையும் வழங்க வேண்டும்

Tags : Persons , Today is International Day of Older Persons. Appreciate love without excluding the elderly
× RELATED கனடாவில் ரூ.133 கோடி மதிப்பிலான...