×

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் 5 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்

சென்னை: தமிழகத்தில் 5 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் 5 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. புதுக்கோட்டை, சிவகங்கை, கரூர், திருச்சி, சேலம் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என கூறியுள்ளது. தென் தமிழக கடலோர மாவட்டங்கள், ஏனைய உள் மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என தெரிவித்துள்ளது. மேலும், தென் தமிழக கடலோர மாவட்டங்கள், ஏனைய உள் மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது. சென்னை நகர், புறநகரில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும்,  சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என கூறியுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் கடலூர் அண்ணாமலை நகர், சிதம்பரத்தில் தலா 13 செ.மீ., கொள்ளிடம் 11 செ.மீ., கொத்தவச்சேரி 9 செ.மீ. மழை பதிவானகியுள்ளது. தொழுதூர், நெய்வேலி 7 செ.மீ., சீர்காழி, கள்ளக்குறிச்சி 6 செ.மீ. மழை பதிவாகி உள்ளது என தெரிவித்துள்ளது. நேற்று சென்னையில் பல இடங்களில் இடி மற்றும் மின்னலுடன் பலத்த மழை பெய்து வருகிறது. மயிலாப்பூர், மந்தைவெளி, அடையாறு, மேற்கு மாம்பலம், தியாகராயர் நகர், தாம்பரம், மீனம்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் பலத்த மழை பெய்தது. மேலும் தமிழகத்தில் பல இடங்களில் கனமழை பெய்து வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


Tags : thundershowers ,districts ,Tamil Nadu ,Meteorological Center , Atmospheric, in Tamil Nadu, thunderstorms, heavy rains, weather center
× RELATED தமிழ்நாட்டில் நேற்று 16 மாவட்டங்களில்...