×

கொரோனா தொற்று பாதிப்பு: ஊரடங்கு அமல்படுத்தி 6 மாதம் நிறைவு

சென்னை: கொரோனா தொற்றை கட்டுப்படுத்த  இந்தியாவில் ஊரடங்கு அமல்படுத்தி இன்றுடன் ஆறு மாதம் நிறைவடைந்துள்ளது. இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் கொரோனா தொற்று பரவத் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து வெளி நாட்டு விமான சேவை நிறுத்தப்பட்டது. மேலும் பல்வேறு மாநிலங்களில் கொரோனா தொற்று வேகமாக பரவத் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து மார்ச் 25ம் தேதி தொலைக்காட்சி மூலம் நாட்டு  உரையாற்றிய மோடி 21 நாட்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று அறிவித்தார்.

இதன்படி ஜூலை மாதம் வரை மத்திய அரசு அமல்படுத்திய ஊரடங்கு அமலில் இருந்தது. இதனைத் தொடர்ந்து ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை மத்திய அரசு அறிவித்தது. தற்போது 4ம் கட்ட ஊரடங்கு தளர்வு நடைமுறையில் உள்ளது. இந்நிலையில் இந்தியாவில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இன்றுடன் 6 மாதம் நிறைவடைகிறது. இந்தியாவில் தற்போது வரை 9 லட்சத்து 66 ஆயிரத்து 382 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 46 லட்சத்து 74 ஆயிரத்து 987 பேர் குணமைடைந்துள்ளனர். 91 ஆயிரத்து 149 பேர் மரணம் அடைந்துள்ளனர்.



Tags : completion , Vulnerability to corona infection: 6 months completion of curfew implementation
× RELATED ஊர்க்காவல் படை பயிற்சி நிறைவு விழா