கள்ளக்காதலி வீட்டில் புது மாப்பிள்ளை தற்கொலை

தாம்பரம்: சிட்லபாக்கம் கோதாவரி தெருவை சேர்ந்தவர் கேப்ரியல் ஸ்டீபன் லூதர் ராஜ் (32). இவருக்கும் சர்மிளாவுக்கும் (28) கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. கேப்ரியலுக்கும் அதே தெருவை சேர்ந்த மேரிக்கும் (30) கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. இருவரும் கணவன், மனைவி போல் வாழ்ந்துள்ளனர். இது, கேப்ரியல் மனைவி சர்மிளாவிற்கு தெரிந்ததால், தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் தகராறு ஏற்பட்டுள்ளது. வீட்டை விட்டு வெளியேறிய கேப்ரியல், மேரி வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு நேற்று அதிகாலை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Related Stories:

>