×

கொரோனா பரவல் குறித்து மருத்துவமனை முதல்வர்களுடன் ஆணையர் ஆலோசனை

சென்னை: சென்னையில் செப்டம்பர் 19ம் தேதி வரை 1 லட்சத்து 54 ஆயிரத்து 624 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 1 லட்சத்து 41 ஆயிரத்து 612 பேர் குணமடைந்து விட்டனர். 3 ஆயிரத்து 46 பேர் மரணம் அடைந்துள்ளனர். 9,966 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் சென்னையில் ஊரடங்கு தளர்வு அளிக்கப்பட்டுள்ளதால் தற்போதைய நிலையில் கொரோனா பாதிப்பு மற்றும் வரும் நாட்களில் தொற்று அதிகரித்தால் எடுக்க வேண்டிய நடவடிக்கை தொடர்பாக சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் ஆலோசனை நடத்தினார்.

இதில் ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனை முதல்வர் தேரனிராஜன், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை முதல்வர் வசந்தாமணி, ஸ்டான்லி அரசு மருத்துவமனை முதல்வர் பாலாஜி, ஓமந்தூரார் அரசு மருத்துவமனை முதல்வர் ஜெயந்தி, மாநகராட்சி சுகாதார துணை ஆணையர் மதுசூதனன், உலக சுகாதார நிறுவன அதிகாரிகள், மாநகர நல அலுவலர் ஜெகதீசன் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த ஆலோசனை கூட்டத்தில், சென்னையில் தற்போது உள்ள எண்ணிக்கையை விட 3மடங்கு அதிகரித்தாலும் அதனை எதிர்கொள்வதற்கான அனைத்து மருத்துவ வசதிகளும் தயார் நிலையில் உள்ளதாக மருத்துவமனை முதல்வர்கள் தெரிவித்தனர்.

Tags : Commissioner ,corona spread , Commissioner consults with hospital principals regarding corona spread
× RELATED போடி நகராட்சிக்கு புதிய கமிஷனர்