×

சிறுமியிடம் பலாத்கார முயற்சி வாலிபர் கைது

காஞ்சிபுரம்:  காஞ்சிபுரம் அடுத்த ஓரிக்கை, மிலிட்டரி ரோட்டை சேர்ந்தவர் ஹரிகிருஷ்ணன் (31). நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் ஹரிகிருஷ்ணன், அதே பகுதியில் நடந்து சென்றார். அப்போது, அங்கு இருளர் இனத்தை சேர்ந்த தம்பதி, 8 வயது மகளுடன் தூங்கினர். இதை பார்த்த வாலிபர், தூங்கி கொண்டிருந்த சிறுமியை தூக்கி  சென்று, பலாத்காரம் செய்ய முயன்றார். இதனால், சிறுமி அலறி கூச்சலிட்டாள். அவளரது அலறல் கேட்டு, பொது மக்கள் ஓடிவந்தனர். உடனே, ஹரிகிருஷ்ணன் அங்கிருந்து தப்பிவிட்டார்.  புகாரின்படி காஞ்சிபுரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவாக இருந்த ஹரிகிருஷ்ணனை நேற்று கைது செய்தனர்.

Tags : rape , Youth arrested for attempted rape of a girl
× RELATED காரிமங்கலம் அருகே சிறுமியை கடத்திய வாலிபர் கைது