×

ஒரே நாளில் 59 பேர் உயிரிழப்பு தமிழகத்தில் புதிதாக 5,560 பேருக்கு தொற்று: மொத்த பாதிப்பு 5.25 லட்சமாக உயர்வு

சென்னை: தமிழகத்தில் புதிதாக 5,560 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைச் சேர்த்து மொத்த பாதிப்பு 5.25 லட்சமாக உயர்ந்துள்ளது. நேற்று மட்டும் 59 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதைச் சேர்த்து மொத்த மரணம் 8,618 ஆக உயர்ந்துள்ளது. இது தொடர்பாக தமிழக சுகாராத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் நேற்று மட்டும் 84,524 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது. இதில் 5,560 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் சென்னையில் 992 பேர், செங்கல்பட்டில் 283 பேர், திருவள்ளூரில் 239 பேர், காஞ்சிபுரத்தில் 187 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதைச் சேர்த்து தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்து 25 ஆயிரத்து 420 ஆக உயர்ந்துள்ளது. நேற்று பாதிக்கப்பட்டவர்களில் 3,319 பேர் ஆண்கள். 2,241 பேர் பெண்கள். தற்போது வரை 3 லட்சத்து 16 ஆயிரத்து 646 ஆண்கள், 2 லட்சத்து 8 ஆயிரத்து 745 பேர் பெண்கள், 29 திருநங்கைகள் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று மட்டும் 5,524 பேர் குணமடைந்து மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது வரை 4 லட்சத்து 70 ஆயிரத்து 192 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 46 ஆயிரத்து 610 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று மட்டும் 59 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதில் தனியார் மருத்துவமனையில் 23 பேரும், அரசு மருத்துவமனையில் 36 பேரும் உயிரிழந்துள்ளனர்.

சென்னையில் 12 பேர், திருவள்ளூரில் 7 பேர், கடலூரில் 5 பேர், மதுரையில் 4 பேர், கோவை, காஞ்சிபுரம், சேலம், தஞ்சாவூர், திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் தலா 3 பேர், செங்கல்பட்டு, கரூர், கிருஷ்ணகிரி, நாமக்கல், வேலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் தலா 2 பேர், திண்டுக்கல், கன்னியாகுமரி, தேனியில் தலா ஒருவர் என்று மொத்தம் என்று 59 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதில் 7 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மட்டும் மரணம் அடைந்துள்ளனர். 52 பேர் இணை நோய்களுடன் கொரோனா பாதிக்கப்பட்டு மரணம் அடைந்துள்ளனர். இதையடுத்து தமிழகத்தில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8618 ஆக உயர்ந்துள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags : deaths ,Tamil Nadu , 9 deaths in a single day 5,560 new infections in Tamil Nadu: Total incidence increased to 5.25 lakhs
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...