×

சிட்டி சிவில் கோர்ட்டில் மனுதாக்கல் செய்ய நேரம் நீட்டிப்பு

சென்னை: சிட்டி சிவில் நீதிமன்றங்களில் மனுதாக்கல் செய்ய கூடுதல் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இது குறித்து சிட்டி சிவில் நீதிமன்றம் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது: சிட்டி சிவில் நீதிமன்றம், சிறு வழக்குகளுக்கான நீதிமன்றம் மற்றும் குடும்பநல நீதிமன்றங்களில் வழக்கு தொடர, எஸ்பிளனேடு நுழைவு வாயில் அருகே மனுக்களை போடுவதற்கு வசதியாக பெட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. இந்தப் பெட்டிகளில் மனுக்களை போடுவதற்கான நேரம் காலை 10:30 மணி முதல், பிற்பகல் 1:30 மணி வரை, அனுமதிக்கப்பட்டிருந்தது. தற்போது இந்த நேரம் மாலை 3:30 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே, வழக்கறிஞர்கள் வழக்கு தொடருவோர், மாலை 3:30 மணி வரை மனுக்களை பெட்டிகளில் போடலாம். இது தவிர நடைமுறையில் இருக்கும் மற்ற நிபந்தனைகள் தொடரும்.

Tags : City Civil Court , Extension of time to file petition in City Civil Court
× RELATED மாணவர் சேர்க்கைக்கு அவகாசம் நீட்டிப்பு