×

சரக்கு பட போஸ்டரில் வக்கீல்களின் கழுத்து பட்டை அவமதிப்பை நீக்க வேண்டும்: நடிகர் மன்சூர் அலிகானுக்கு சென்னை சிட்டி சிவில் கோர்ட் உத்தரவு

சென்னை: நடிகர் மன்சூர் அலிகான் சரக்கு என்ற படத்தில் ஹீரோவாக நடித்திருக்கிறார். இந்தப் படத்தை ஜெயக்குமார் ஜே இயக்கியிருக்கிறார். இயக்குநர்கள் கே.எஸ். ரவிக்குமார், கே.பாக்கியராஜ், நடிகர் யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படம் கடந்த 29ம் தேதி வெளியானது. இந்தநிலையில் சென்னை 5 வது கூடுதல் சிட்டி சிவில் நீதிமன்றத்தில், சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க செயலாளர் கிருஷ்ணகுமார் தாக்கல் செய்த மனுவில், மன்சூர் அலிகான் தயாரித்து வெளியிட்டுள்ள சரக்கு படத்தின் போஸ்டரில், வழக்கறிஞர்கள் அணியும் கழுத்துப்பட்டை (காலர்பேண்ட்) இடம் பெற்றுள்ளது.

குறிப்பாக மது பாட்டிலுக்கு மேல் அந்த கழுத்துதப்பட்டை படம் இடம்பெற்றுள்ளது. மிகவும் பழமையான கண்ணியமாக வழக்கறிஞர்களின் அடையாளமாக பயன்படுத்தும் கழுத்துப்பட்டையை அவமதிக்கும் வகையில் படத்தில் பயன்படுத்தி உள்ளனர். இது வழக்கறிஞர் சமுதாயத்தை களங்கப்படுத்தும் முயற்சி. எனவே அந்த கழுத்தப்பட்டை படத்தை நீக்க வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது. மனு மீதான விசாரணை நீதிபதி சுந்தர்ராஜன் முன்பு நடைபெற்றது. சங்கத்தின் சார்பில் மூத்த வழக்கறிஞர் எஸ்.பிரபாகரன், வழக்கறிஞர் சங்கத் தலைவர் ஜி.மோகன கிருஷ்ணன், செயலாளர் கிருஷ்ணகுமார் ஆகியோர் ஆஜரானர்கள். வழக்கை விசாரித்த நீதிபதி, சரக்கு பட போஸ்டரில் வழக்கறிஞர்கள் அணியும் கழுத்துப் பட்டை படத்தை உடனடியாக நீக்க வேண்டும் என்று நடிகர் மன்சூர் அலிகானுக்கு உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தார்.

The post சரக்கு பட போஸ்டரில் வக்கீல்களின் கழுத்து பட்டை அவமதிப்பை நீக்க வேண்டும்: நடிகர் மன்சூர் அலிகானுக்கு சென்னை சிட்டி சிவில் கோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Chennai City Civil Court ,Mansoor Ali Khan ,Chennai ,Jayakumar J. ,K.S. Ravikumar ,K. Pakhyaraj ,Yogi Babu ,Mansoor Alikan ,
× RELATED வேலூர் தொகுதியில் சுயேச்சையாக போட்டி...