×

முகக்கவசங்கள், ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்துகள், சானிடைசர்கள் ஏற்றுமதிக்கான தடை நீக்கம் : மத்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் விளக்கம்!!

புதுடெல்லி: கொரோனா சூழலில் உள்நாட்டு தேவைகளை முக்கியத்துவம் அளித்து கவச உடைகள், சானிடைசர்களுக்கான ஏற்றுமதி தடை செய்யப்பட்டிருந்த நிலையில் தற்போது கட்டுப்பாடுகள் விலக்கி கொள்ளப்பட்டுள்ளன. மக்களவையில் வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், முகக்கவசங்கள், ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்துகள், 13 பிற மருந்து மூலப்பொருட்கள் உள்ளிட்ட பல மருத்துவ பொருட்களுக்கான கட்டுப்பாடுகள் நீக்கிக்கொள்ளப்பட்டுள்ளது என்றார். சானிடைசர்கள், சுவாசக் கருவிகள் போன்றவற்றுக்கான தடையும் நீக்கப்பட்டுள்ளது. பரிசோதனைக் கருவிகள், என்.95 முகக்கவசங்களை மாதாந்திர ஒதுக்கீடு அளவு மட்டும் ஏற்றுமதி செய்யலாம் என்றார்.

கொரோனா பரவல் அதிகம் இருந்ததால் மேற்கூறிய மருத்துவ உபகரணங்களை ஏற்றுமதி செய்ய ஏப்ரல் மாதத்தில் தடை விதிக்கப்பட்டது’.உள்நாட்டுத் தேவை, உற்பத்தித் திறன் மற்றும் ஏற்றுமதிக்கான உபரி பொருட்கள் கிடைப்பது குறித்து அவ்வப்போது மதிப்பீடு செய்யப்பட்டதைத் தொடர்ந்து தடைகள் தளர்த்தப்பட்டுள்ளன.மார்ச் மாதம் கவச உடைகள் இறக்குமதி செய்யப்பட்ட நிலையில், தற்போது மாதத்திற்கு 1.5 கோடி கவச உடைகள் உள்நாட்டில் உற்பத்தியாகின்றன. அதே போல் ஆண்டுக்கு 10 லட்சம் லிட்டராக இருந்த ஆல்கஹால் கலந்த சானிடைசர்கள் உற்பத்தி, தற்போது நாளொன்றுக்கு 38 லட்சம் லிட்டராக அதிகரித்துள்ளது. இதனால் தடை நீக்கப்பட்டுள்ளது’ என அமைச்சர் தனது பதிலில் கூறியுள்ளார்.

Tags : Piyush Goyal ,sanitizers , Masks, Hydroxychloroquine, Drugs, Sanitizers, Exports, Prohibition, Removal, Union Trade Minister, Piyush Goyal, Description
× RELATED பாஜக தேர்தல் அறிக்கைக் குழு...