×

ராமர் கோயிலை மூடுவதை தடுக்கவே 400 எம்.பி.க்கள் வேணும்: மோடி பிரசாரம்

தார்: மத்தியபிரதேசத்தின் தார் தொகுதியில் நேற்று நடந்த பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு வேட்பாளருக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார். அப்போது பேசிய பிரதமர் மோடி, “நாடாளுமன்றத்தில் பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஏற்கனவே 400 இடங்களுக்கு மேல் பெற்றுள்ளது. ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து தரும் 370 பிரிவை ரத்து செய்ய இந்த எண்ணிக்கையை பயன்படுத்தினோம்.

பழங்குடியின பெண்ணை குடியரசு தலைவராக்கவும், பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்கவும் இந்த எண்ணிக்கையை பயன்படுத்தினோம். ஆனால் இப்போது தேர்தலில் பாஜ 400 இடங்களில் வெற்றி பெற்றால் அரசியலமைப்பை மாற்றி விடும் என காங்கிரஸ் வதந்திகளை பரப்பி வருகிறது. காங்கிரஸ் வெற்றி பெற்று ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து தரும் 370 சட்டப்பிரிவு மீண்டும் கொண்டு வருவதை தடுக்கவும், அயோத்தி ராமர் கோயில் மூடப்படுவதை தடுக்கவுமே பாஜ 400 இடங்களில் வெற்றி பெற வேண்டும் என கேட்கிறேன்” என்று விளக்கம் அளித்துள்ளார்.

The post ராமர் கோயிலை மூடுவதை தடுக்கவே 400 எம்.பி.க்கள் வேணும்: மோடி பிரசாரம் appeared first on Dinakaran.

Tags : Ramar temple ,MODI ,Dar ,Dar constituency ,Madhya Pradesh ,National Democratic Alliance ,Baja ,Parliament ,S Venum ,
× RELATED ஆட்சிக்கு வந்தால் ராமர் கோயிலை...