×

இந்தி தெரியாது போ...கர்நாடகாவிலும் பரவியது

பெங்களூரு: ‘இந்தி தெரியாது ேபா.. நான் கன்னடன்’ என்ற டி சர்ட் அணிந்து கொண்டு, கர்நாடகாவின் முன்னாள் அமைச்சரும் தற்போதைய எம்எல்ஏவுமான ஜமீர் அகமதுகான் வலம்வந்து கலக்குகிறார்.  மத்திய அரசு இந்தி திணிப்பு செய்வதற்கு தென்மாநிலங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. குறிப்பாக தமிழகத்தில் ‘இந்தி தெரியாது போடா...’ என்ற வாசகம் பயங்கர டிரெண்டிங் ஆனது. கர்நாடகாவிலும் இந்தி திணிப்பு எதிராக பலர் களமிறங்கி உள்ளனர். கன்னட நடிகர் சிவராஜ்குமார் உள்பட திரையுலகினர், கன்னட அமைப்பினர், நாடக மன்றங்களை சேர்ந்தவர்கள் கன்னட மொழிக்கு ஆதரவாகவும் இந்தி மொழிக்கு எதிராகவும் டி சர்டுகளில் வாசகங்கள் பதித்து போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

அந்த பட்டியலில் தற்போது முன்னாள் அமைச்சரும் தொழிலதிபரும் தற்போதைய சாம்ராஜ்பேட்டை தொகுதி எம்எல்ஏவுமான ஜமீர் அகமதுகான் சேர்ந்துள்ளார். சிவப்பு நிறத்தில் வடிவமைத்துள் டி சர்ட்டில் ‘‘இந்தி தெரியாது போ... நான் கன்னடன் என்ற வாசகம் பதித்துள்ளார். இதே டி சர்ட் அணிந்து கன்னட அமைப்பினர் நடத்திய போராட்டத்திலும் பங்கேற்றுள்ளார்.Tags : Karnataka , Don't know Hindi ... spread in Karnataka too
× RELATED இந்தி தெரியாவிட்டால் வேலை இல்லை என...