×

தங்கம் விலை சவரனுக்கு 120 குறைந்தது

சென்னை: தங்கம் விலை சவரனுக்கு 120 குறைந்து, 39,240க்கு விற்பனை செய்யப்பட்டது.  தங்கம் விலை கடந்த மார்ச் மாதம் முதல் அதிகரித்து வந்தது. அதன் பிறகு கடந்த மாதம் 7ம் தேதி முதல் ஒரு வாரம் சற்று விலை குறைந்தது. ஒரு வாரத்திற்கு பிறகு தங்கம் விலை ஏற்றம், இறக்கத்துடன் காணப்பட்டு வந்தது.  பின்னர் கடந்த 31ம் தேதி காலையில் தங்கம் விலை மேலும் அதிரடியாக உயர்ந்தது. கிராமுக்கு 27 அதிகரித்து ஒரு கிராம் 4,954க்கும், சவரனுக்கு 216 அதிகரித்து ஒரு சவரன் 39,632க்கும் விற்கப்பட்டது. அதன் பின்பு நேற்று முன்தினம் மாலை முதல் தங்கம் விலை குறையத் தொடங்கியது.

  நேற்று காலை தங்கம் விலை குறைந்தது. ஒரு கிராமுக்கு 22 குறைந்தது. இதனால் ஒரு கிராம் விலை 4898 ஆக குறைந்தது. சவரனுக்கு 176 குறைந்து 39,184க்கு விற்கப்பட்டது. மாலையில் மீண்டும் சற்று உயர்ந்து ஒரு கிராம் 4905 ஆக விற்கப்பட்டது. இதனால் சவரனுக்கு 120 குறைந்து ஒரு சவரன் 39,240க்கு விற்கப்பட்டது. ஒரு கிராம் தங்கம் 5ஆயிரத்தை நெருங்கிய நிலையில் தங்கம் விலை சற்று குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.



Tags : Gold prices fell by 120 per razor
× RELATED மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்...