×

அதிகாரிகள் அலட்சியத்தால் நீண்ட நாளாக மூடிகிடக்கும் பஞ்சாயத்து அலுவலகம்

ரிஷிவந்தியம்: கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் ஒன்றியத்திற்குட்பட்ட முட்டியம் கிராமத்தில் சுமார் 350க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இக்கிராமத்தில் உள்ள பஞ்சாயத்து அலுவலகம் நீண்ட நாளாக பயன்பாட்டில் இல்லாமல் பூட்டிக் கிடக்கிறது. இதனால் இப்பகுதி மக்கள்,  வீட்டு வரி ரசீது, குடிநீர் பிரச்னை, தெரு மின்விளக்கு, கழிப்பறை கட்டுதல், சாக்கடை நீர், சாலை வசதி மற்றும் அரசு சார்ந்த திட்டங்கள் போன்ற பல்வேறு அடிப்படை தேவைகளுக்காக எளிதில் அதிகாரிகளை தொடர்பு கொள்ள முடியாமல் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக பஞ்சாயத்து அலுவலகத்தை திறந்து வைத்து மக்கள் பயன்பாட்டிற்கு ஏதுவாக ஆவணங்களை வைத்து பராமரிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags : Panchayat office , Panchayat office closed for a long time due to negligence of officials
× RELATED கல்லிடைக்குறிச்சியில் வனத்துறை அலட்சியத்தால் கர்ப்பிணி யானை சாவு