×

சத்தியமங்கலம் அருகே டாஸ்மாக் கடை திறக்கும் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து குழந்தைகளுடன் சமையல் செய்து பெண்கள் நூதன போராட்டம்!!!

ஈரோடு:  ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் புதிய டாஸ்மாக் கடை திறப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து, பெண்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும், போராட்டக்களத்திற்கு குழந்தைகளையும் அழைத்து வந்து கல்வி பயிலவும் அவர்கள் ஏற்பாடு செய்துள்ளனர். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம்  பேருந்து நிலையம் அருகே புதிய டாஸ்மாக் கடையை அமைக்க அரசு முயற்சி எடுத்து வருவதே பிரச்சனைக்கு காரணம்.

200க்கும் மேற்பட்ட குடியிருப்புகளை கொண்ட காந்தி நகரில் டாஸ்மாக் கடையை அமைக்க கடந்தாண்டு டிசம்பர் மாதம் முதலே முயற்சி எடுக்கப்பட்டு வந்தது. இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்ததால், தற்போது 8 மாதங்களுக்கு பிறகு டாஸ்மாக் கடையை அமைக்க அரசு அதிகாரிகள் மீண்டும் முயற்சி எடுத்தனர். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

 தொடர் போராட்டம் மட்டுமே பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வு என கருதிய பெண்கள், தற்போது ஆன்லைன் வகுப்புகள் நடைபெறுவதால், குழந்தைகளை அழைத்து வந்து கல்வி பயில செய்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.  மேலும், டாஸ்மாக் கடை முன்பே பந்தல் அமைத்து சமையல் செய்து வருகின்றனர்.

இதனையடுத்து அப்பகுதி பெண்கள் 2வது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இந்த பிரச்சனையில் அரசு தலையிட்டு உடனடி தீர்வு காண வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாகவும் உள்ளது.

Tags : women ,protest ,children ,store ,Satyamangalam ,Tasmac , Erode, satyamangalam, tasmac, Protest, Students, childrens
× RELATED உல்லாசமாக இருந்துவிட்டு ஏமாற்ற...