×

மர்ம நபர்கள் அட்டகாசத்தால் திற்பரப்பு தடுப்பணையின் மதகுகள் சேதம்

*அருவியில் வெள்ளம் பாய்வது அதிகரிப்பு

*கால்வாய்களுக்கு தண்ணீர் செல்வது பாதிப்பு

குலசேகரம் : குமரிமாவட்டத்தில் சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரிக்கு அடுத்த பெரிய சுற்றுலாத்தலம் திற்பரப்பு அருவி. மேற்கு தொடர்ச்சி மலையிலிருந்து உற்பத்தியாகும் வற்றாத கோதையாறு திற்பரப்பில் அருவியாக விழுகிறது.

இதனால் குறிப்பிட்ட சீசன் என்று இல்லாமல் ஆண்டின் பெரும்பாலான நாட்களிலும் அருவியில் தண்ணீர் கொட்டுகிறது. இதனால் எல்லா நாட்களிலும் பயணிகள் வருகை இருக்கும் விடுமுறை நாட்களில் கூட்டம் களை கட்டும். பயணிகளை கவரும் வகையில் அருவியின் அருகில் சிறுவர் நீச்சல்குளம், சிறுவர்பூங்கா மற்றும் பூஙகாக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த பகுதிகளில் பயணிகள் பொழுது போக்கும் சூழல் உள்ளதால் சுற்றுலாவரும் பயணிகள் இங்கு அதிக நேரம் செலவிடுகின்றனர். சுற்றுலா வரும் பயணிகளிடமிருந்து திற்பரப்பு பேரூராட்சியால் ரூ.10 நுழைவு கட்டணமாக வசூலிக்கபடுகிறது.

கடந்த ஆண்டுவரை நுழைவு கட்டணம் வசூலிப்பதற்கான உரிமத்திற்கான ஒப்பந்த தொகை ஜி.எஸ்.டி வரி தவிர்த்து ரூ.59.60 லட்சமாக இருந்தது. நாளுக்கு நாள் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து சுற்றுலா வளர்ச்சி பெறுவதால் இந்த ஆண்டு நுழைவுகட்டணம் வசூலிக்கும் ஒப்பந்த உரிமை பெறுவதற்கு போட்டி கடுமையாக இருந்தது. இதனால் இரண்டு மடங்கு அதிகரித்து ஜ.எஸ்டி வரி தவிர்த்து ரூ.1.40 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டது.

திற்பரப்பு அருவியின் மேல்பகுதியில் தடுப்பணை உள்ளது. இந்த தடுப்பணையிலிருந்து திற்பரப்பு வலதுகரை கால்வாய், திற்பரப்பு இடதுகரைகால்வாய என இரண்டு கால்வாய்கள் பிரிந்து செல்கின்றன. பல கி.மீட்டர் செல்லும் இந்த கால்வாய்களால் பல்வேறு வகையான விவசாயம் நடைபெறுகிறது. நிலத்தடி நீராதாரத்திற்கும் முக்கிய பங்கு வகிக்கிறது.

இந்த தடுப்பணையில் திற்பரப்பிற்கு சுற்றுலா வரும் பயணிகளை மகிழ்விப்பதற்காக கடந்த 2005ம் ஆண்டு முதல் உல்லாசபடகு சவாரி நடத்தப்படுகிறது. இது கடையாலுமூடு பேரு்ராட்சியால் நிர்வாகிக்கபடுகிறது. இங்கு படகு சேவைக்கு கட்டணம் வசூலிப்பதற்கான உரிமம் கடந்த ஆண்டு ரூ.18 லட்சமாக இருந்தது. இந்த ஆண்டு கடும் போட்டிகாரணமாக ரூ..63 லட்சமாக உயர்ந்தது.

அருவியின் நுழைவுகட்டணம் வசூலித்தல் படகுதுறை சேவை கட்டணம் வசூலித்தல் போன்றவைகளுக்கான உரிமம் பல மடங்கு அதிகரித்து ஏலம் போனதால் ஏலம் எடுத்தவர்கள் போட்ட பணத்தை எடுக்க விழிப்புடன் இருக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.கடந்த சில ஆண்டுகளுக்கு முன் திற்பரப்பு தடுப்பணையின் தொடக்க பகுதியான களியல் பகுதியிலிருந்து வில்லுகுறி கூட்டுகுடிநீர் திட்டம் அழகியபாண்டிபுரம் கூட்டுக்குடிநீர் திட்டம் என இரண்டு மெகா குடிநீர் திட்டஙகளுக்கு தண்ணீர் எடுக்கப்பட்டு வருகிறது. இதனால் கடும் வெயில் காலங்களில் கோதையாற்றில் தண்ணீர் வறண்டு விடுகிறது. இதனால் ஆண்டு முழுவதும் தண்ணீர் கொட்டும் அருவி என்ற புகழுடன் சுற்றுலாபயணிகளை கவர்ந்து வந்த திற்பரப்பு அருவி கோடையில் வறண்டு விடுகிறது.

கடந்த ஆண்டு அதிக அளவு மழை பெய்ததால் திற்பரப்பு அருவி எப்பொழுதும் ஆர்ப்பரித்து கொட்டி வந்தது. வடகிழக்கு பருவமழை ஓய்ந்த பின்னர் கடந்த சில மாதங்களாக அக்கினி வெயிலை மிஞ்சும் வண்ணம் வெயில் கொளுத்தி வருகிறது. இதனால் நீர் நிலைகள் வறண்டு காணப்படுகிறது. கோதையாறும் வறண்டு கட்டாந்தரையாக காட்சியளித்து. இதனால் திற்பரப்பு அருவியில் தண்ணீர் இன்றி பாறைகளில் தண்ணீர் லேசாக கசியும் நிலையில் காட்சியளித்தது. இது வெயிலின் தாக்கத்தை தணிக்க அருவியில் குளியல் போடவரும் பயணிகளுக்கு ஏமாற்றத்தை கொடுத்தது. திற்பரப்பு தடுப்பணையிலும் தண்ணீர் வெகுவாக குறைந்து படகுசேவை

நுழைவு பகுதியில் படகுதுறை டிக்கெட்டுகள் விற்பனை தொடர வேண்டும்

திற்பரப்பு அருவிக்கு சுற்றுலா வரும் வாகனங்கள் திற்பரப்பு பேரூராட்சிக்குட்பட்ட அருவியின் நுழைவு பகுதிக்கு அருகிலுள்ள பார்க்கிங பகுதிக்கு வருகின்றன. இதனால் தடுப்பணையில் நடைபெறும் உல்லாச படகு சவரிக்கான சேவைகட்டண டிக்கெட்டுகள் அருவியின் நுழைவு பகுதிக்கு அருகில் மற்றும் அந்த பகுதிகளிலுள்ள கடைகளில் வைத்து விற்பனை செய்யப்படுகிறது. இதனை பார்த்துதான் சுற்றுலா பயணிகளுக்கு தடுப்பணையில் உல்லாச படகு சவாரி நடைபெறும் தகவல் தெரிகிறது. இதனால் அருவிக்கு சுற்றுலா வரும் பயணிகள் ஆர்வமுடன் படகு சவாரியில் ஈடுபடுகின்றனர். இதன் மூலம் படகு துறையிலும் சுற்றுலா களைகட்டுகிறது.

படகு சேவை தொடங்கிய 2005ம் ஆண்டு முதல் இதற்கான டிக்கெட் திற்பரப்பு நுழைவு வாயில் அருகில் விற்பனை செய்யப்பட்டு வந்துள்ளது. தற்போது தொழில்போட்டி காரணமாக அருவியின் நுழைவு கட்டணம் வசூலிக்கும் புதிய ஒப்பந்தகாரர்கள் படகு சேவைக்கான டிக்கெட்டுகள் அந்த பகுதியில் விற்பனை செய்ய எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இதனால் அவ்வப்போது மோதல் ஏற்படும் சூழல் ஏற்படுகிறது.

திற்பரப்பு அருவி சுற்றுலா உல்லாசபடகு சேவை என டெண்டர் நடத்தி விட்டு அங்கு டிககெட்கள் விற்பனை செய்வதை தடுப்பது சுற்றுலா வளர்ச்சியை பாதிக்கும். எனவே பயணிகள் வசதிக்காக நுழைவு பகுதியில் படகு சேவைக்கான டிக்கெட்டுகள் தொடர்ந்து வழங்க வேண்டும் இதுவே ஆரோக்கியமான சுற்றுலா வளர்ச்சிக்கு ஏற்புடையதாகும் என்று சுற்றுலா ஆர்வலர்கள் கூறுகிறன்றனர்.

The post மர்ம நபர்கள் அட்டகாசத்தால் திற்பரப்பு தடுப்பணையின் மதகுகள் சேதம் appeared first on Dinakaran.

Tags : Tilparapu barrage ,Kulasekaram ,Kanyakumari ,Kumari district ,Tilparapu ,Western Ghats ,Kotaiyar ,Tilparabha ,Dillparappu ,Dinakaran ,
× RELATED ஷப்பா… வெயில் தாங்க முடியல… நீர்நிலை...