×

லாரியின் கீழே போதையில் தூங்கியபோது சக்கரத்தில் சிக்கி வாலிபர் பலி

ஸ்ரீபெரும்பெதூர்: ஸ்ரீபெரும்புதூர் அருகே ஓரகடம் அடுத்த கூழங்கல்சேரியில் ஹாலோ பிளாக் தயாரிக்கும் தனியார் தொழிற்சாலை இயங்குகிறது. இங்கு அதே பகுதியை சேர்ந்த குமரேசன் (24), அவரது மைத்துனர் சரவணன் (18), நல்லான்பெரும்பேடு பகுதியை சேர்ந்த கார்த்திக் (21) ஆகியோர் கூலி தொழிலாளிகளாக வேலை செய்கின்றனர். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு 3 பேரும் வேலைக்கு புறப்பட்டனர். அப்போது 3 பேரும் மது அருந்திவிட்டு சென்றனர். சரவணனுக்கு போதை தலைக்கேறியதும், அவரை வீட்டுக்கு அனுப்பினர். அப்போது, ஹாலோ பிளாக் கற்களை ஏற்றி செல்ல லாரி வந்தது. அதில் வந்த டிரைவர், சாப்பிட சென்றார்.

போதையில் இருந்த சரவணன், லாரியின் கீழ் பகுதியில் படுத்து கொண்டார். இதற்கிடையில், அங்கிருந்த தொழிலாளிகள், லாரியில் கற்களை ஏற்றினர். பின்னர், மீண்டும் சிறிது தூரத்தில் இருந்த கற்களை, லாரியில் ஏற்றுவதற்காக, குமரேசன் லாரியை ரிவர்சில் எடுத்தார். இதில், கீழே படுத்து இருந்த சரவணன் மீது லாரி சக்கரம் ஏறியதில், உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே இறந்தார். புகாரின்படி சோமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

ஸ்ரீபெரும்புதூர் அருகே சுங்குவார்சத்திரம் அடுத்த சிறுமாங்காடு கிராமத்தை சேர்ந்தவர் சந்திரசேகர் (35). 10க்கும் மேற்பட்ட பசு மற்றும் எருமை மாடுகளை வளர்த்து வந்தார். இந்த மாடுகளில் பால் கறந்து, தினமும் சுற்றுவட்டார பகுதிகளில் விற்பனை செய்தார். இந்நிலையில் நேற்று மாலை திடீரென இடியுடன் பலத்த மழை பெய்தது. அப்போது இடி விழுந்ததில், சந்திரசேகர் உடல் கருகி சம்பவ இடத்திலேயே இறந்தார். அவருடன் பசுமாடும் பலியானது. புகாரின்படி சுங்குவார்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

உத்திரமேரூர்: உத்திரமேரூர் அடுத்த மதூர் சிறுமயிலூர் இடையே கிராம சாலையில் நேற்று முன்தினம் இரவு சாலவாக்கம் ரோந்து சென்றனர். அப்போது, மதூர் சாலையில் ஒருவர் சுற்றி திரிந்தார்.  உடனே போலீசார், அவரை பிடித்து காவல் நிலையம் கொண்டு சென்று விசாரித்தனர். அதில், சென்னை ஆவடியை சேர்ந்த ஜெய்குமார் (39).  காஞ்சி தாலுகா, விஷ்ணுகாஞ்சி, மணிமங்கலம், ஆவடி உள்பட பல காவல் நிலையங்களில் 10க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுையில் உள்ளது தெரியவந்தது. இதையடுத்து வழக்குப்பதிந்து, அவரை கைது செய்த போலீசார், அவருக்கு உடந்தையாக இருந்த மதூர் கிராமத்தை சேர்ந்த சத்தியராஜ் (25), தயாளன் (31) ஆகியோரை கைது செய்தனர்.

கூடுவாஞ்சேரி: திருப்போரூர் அருகே செம்பாக்கம் அடுத்த மேலையூர் கிராமம் நேரு தெருவை சேர்ந்தவர் மணி (68). நேற்று முன்தினம் மாலை மணி, கூடுவாஞ்சேரி அருகே பாண்டூர் கிராமத்தில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு சென்றார். பின்னர், வீட்டுக்கு செல்வதற்காக பாண்டூர் பஸ் நிறுத்தத்தில் பஸ்சுக்காக காத்திருந்தார். அப்போது, கூடுவாஞ்சேரியில் இருந்து நெல்லிக்குப்பம் நோக்கி தாறுமாறாக வந்த வேன், மணி மீது பயங்கரமாக மோதியது. இதில், தூக்கி வீசப்பட்ட அவர், அதே வேனில் சிக்கி உடல் நசுங்கி பலியானார். புகாரின்படி கூடுவாஞ்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Tags : Larry , Larry, drug addict, teenager killed
× RELATED லாரி மோதி முன்னாள் திமுக நகர செயலாளர் பலி