×

குடியிருப்பில் குரங்குகள் அட்டகாசம்: பொதுமக்கள் அச்சம்

திருப்புத்தூர்: திருப்புத்தூரில் குடியிருப்பு பகுதிகளில் சுற்றித்திரியும் குரங்குகளால் மக்கள்  அச்சமடைந்துள்ளனர். குரங்குகளை வனத்துறையினர் கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. சிவகங்கை மாவட்டம், திருப்புத்தூர் அஞ்சலக வீதி, அக்ரஹார தோப்புத்தெரு, நந்தவனசந்து உள்ளிட்ட குடியிருப்பு பகுதிகளில் கூட்டமாக 30க்கும் மேற்பட்ட குரங்குகள் சுற்றித் திரிகின்றன. குரங்குகள் வீட்டினுள் நுழைந்து பழங்கள், காய்கறிகள், மற்றும் திண்பண்டங்களை தூக்கிக் கொண்டு சென்று விடுகிறது. மேலும் வீட்டின் மாடியில் கோதுமை, மல்லி, அரசி உள்ளிட்ட பொருட்களை வெயிலில் வைத்திருந்தால் அதையும் சாப்பிட்டு விடுகிறது.

குடியிருப்பு பகுதிகளில் சுற்றுச்சுவர்களில் கூட்டமாக அமர்ந்துகொண்டு மக்களை அச்சுறுத்துகிறது. இந்நிலையில், நேற்று மாலை குடியிருப்பு பகுதியின் முன்பு வெயிலில் பாத்திரம் ஒன்றில் காய்ய வைத்திருந்த மாவை போட்டிப்போட்டுக் கொண்டு குரங்குகள் தின்றன. குரங்குகளை விரட்டினாலும், விரட்டுபவர்களை கடிக்க வருகிறது. இதனால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். எனவே வனத்துறையினர் குடியிருப்பு பகுதிகளில் சுற்றித்திரியும் குரங்குகளைப் பிடிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Tags : apartment , Residential, monkeys, public
× RELATED திருவிக நகர் தொகுதியில் மக்கள்...