×

ஐதராபாத் இஎஸ்ஐ மருத்துவமனை முன்னாள் இயக்குனர், மருந்தாளுநர் வீட்டில் குவித்த ரூ.4.45 கோடி பறிமுதல்: லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் அதிரடி

திருமலை: ஐதரபாத் இஎஸ்ஐ மருத்துவமனை முன்னாள் இயக்குனர், மருந்தாளுனர் வீட்டில் இருந்து ரூ.4.45 கோடி பணத்தை அதிரடியாக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் நேற்று பறிமுதல் செய்தனர். தெலங்கானா மாநிலம், ஐதராபாத்தில் உள்ள இஎஸ்ஐ மருத்துவமனையில் பல கோடி ரூபாய் ஊழல் நடந்திருப்பது குறித்து விசாரணை செய்த லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இ.எஸ்.ஐ. மருத்துவமனை முன்னாள் இயக்குனர் தேவிகா ராணி உள்பட 6 பேரை கைது செய்தனர்.

விசாரணையில் ரூ.9 கோடி மதிப்பு மருந்துகளை தேவிகா ராணி, மருந்தாளுனர் நாகலட்சுமியுடன் இணைந்து போலி ரசீதுகள் தயார் செய்து வாங்காமலேயே வாங்கியது போன்ற கணக்கில் காண்பித்தது தெரிந்தது. மேலும் அடுக்குமாடி குடியிருப்பில் 6 வீடுகள் வாங்க தனியார் ரியல் எஸ்டேட்டில் பினாமி பெயரில் முதலீடு செய்திருப்பதும் தெரிந்தது. இதையடுத்து இந்த இருவர் வீடுகளிலும் நேற்று லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது, தேவிகாராணி வீட்டிலிருந்து ரூ.3 கோடியே 75 லட்சத்து 30 ஆயிரமும், நாகலட்சுமி வீட்டில் ரூ.72 லட்சமும் என மொத்தம் ரூ.4.47 கோடியை அதிகாரிகள் அதிரடியாக பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, இந்த ஊழல் முறைகேட்டில் தேவிகா ராணி உள்பட 6 பேருக்கு தொடர்பு இருப்பது லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.

Tags : hospital director ,pharmacist ,house ,ESI ,Hyderabad ,ex-director ,Hyderabad ESI Hospital , Hyderabad, ESI Hospital, former director, pharmacist's house, Rs 4.45 crore, confiscated, anti-corruption officers
× RELATED கடைகளில் மருந்துகள் விற்பதை தடை செய்ய வேண்டும்